பக்கம்:சாவி-85.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 கொண்டிருந்தார். நான் பவ்யமாகப் போய் வணங்கி நின்றேன். இங்கே பத்திரிகை நிருபர்கள் யாரையும் அனுமதிப்பதில்லை என்று உனக்குத் தெரியாதா?’ என்று காந்திஜி கேட்டார். நான் பதில் ஏதும் பேசாமல் பிரமிப்பில் ஆழ்ந்து கிடந்தேன். பேசுவதற்கு நா எழவில்லை. இந்தியா முழுவதும் தெய்வமாய் வழிபடும் மகாத்மாவின் முன்னால் நான் நின்று கொண்டிருக்கிறேன் என்ற உணர்வே என்னுள் ஒரு பரவசமாக வியாபித்திருந்தது. "இங்கே வருவதற்கு எவ்வளவு பணம் செலவு செய்தாய்?" - மகாத்மா கேட்டார். "நானூறு ரூபாய்' - என்றேன். "கிரிமினல் வேஸ்ட்' என்று சொல்லிவிட்டு 'இரண்டு நாட்கள் மட்டுமே நீ என்னுடன் தங்கலாம். அப்புறம் ஊருக்குத் திரும்பி விட வேண்டும்' என்று ஒரு உத்தரவு போல் ஆள் காட்டி விரல் அசைப்போடு கூறினார். இரண்டாம் நாள் மாலை பிரார்த்தனை முடிந்தவுடன் என்னை அருகில் அழைத்து, "நீ இன்னும் புறப்படவில்லையா? இங்கு கூட்டம் சேர்வது நல்லதல்ல. நிருபர்கள் என்னைப் பின் தொடர்ந்து வருவதை somsät olòlbucocoonso. You have to quit immediately” grairpiti. காந்திஜி என்னைப் பார்த்து Quit என்று சொன்னதும் எனக்குப் பெருமை தாங்கவில்லை. காந்திஜியுடன் உரையாடியது கிடைத்தற்கரிய பேறு என்பது ஒன்று. 1942-ல் ஆகஸ்ட்டில் வெள்ளைக்காரர்களைப் பார்த்து Quit என்று சொன்ன காந்திஜி அடுத்தபடியாக அந்த வரலாற்றுப் புகழ்மிக்க சொல்லை. உபயோகித்தது என்னைப் பார்த்துதான்! இது எனக்குக் கிட்டிய இரண்டாவது பெருமை! அந்த நவகாளி யாத்திரை பற்றி எழுத எனக்கு இரண்டு நாள் அனுபவம் போதவில்லை. எனவே, கல்கத்தா நகருக்கு வந்து அங்கு சில முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து மேலும் சில தகவல்களைச் சேகரித்துக் கொண்டு சென்னை வந்து சேர்ந்தேன்." - 68

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/78&oldid=824897" இலிருந்து மீள்விக்கப்பட்டது