பக்கம்:சாவி-85.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விவரித்துள்ள பாங்கு இந்நூலில் பக்கம் 162ல் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: "நான் அப்போது நாச்சியப்ப செட்டித் தெருவில் வசித்து வந்தேன். பெரியார் அப்போது ஒருநாள் எங்கள் தெருமுனையில் ஒரு கூட்டத்தில் பேசினார். அவர் பேசி நான் கேட்ட முதல் கூட்டம் அதுதான். தம்முடைய கொள்கைகளை அவர் எடுத்து வைத்து, மட்டைக்கு இரண்டு கீற்றாக விளக்கிய விதம்தான் என்னைப் பெரிதும் கவர்ந்தது. எளிமையான, சக்தி வாய்ந்த சொற்கள், அழுத்தம் திருத்தமான உச்சரிப்பு, ஏழை எளிய மக்களின் உள்ளங்களில் ஆழமாகப் பதிந்துவிடக்கூடிய விதத்தில் வார்த்தைகளைப் பெரியார் கையாண்ட முறை எல்லாமே என்னைக் கவர்ந்தது. பிராமணியத்தின் மீது எனக்கே வெறுப்பு தோன்றும் அளவுக்குச் சக்தி வாய்ந்த சொற்பொழிவாக அவருடைய அன்றைய பேச்சு இருந்தது.” 'பெரியார் அவர்கள் தமது சொந்த வாழ்க்கையில் பல பிராமணர்களை நண்பர்களாகப் பெற்றிருந்தார் என்ற உண்மை பலருக்குத் தெரியாது. பார்ப்பணியம், பிராமண ஆதிக்கம் ஆகியவற்றைதான் அவர் தம் வாழ்நாள் முழுதும் எதிர்த்துப் போராடினாரே தவிர, பிராமணர்களை அல்ல. இந்த உண்மை தெரியாமல் அவர் மீது கோபப்பட்ட பிராமணர்கள் உண்டு. பெரியாரின் சொற்பொழிவைக் கேட்டதிலிருந்து அவர் மீது எனக்கு ஒரு பாசமே வந்துவிட்டது. பிராமணியத்துக்கு எதிராக அவர் எடுத்து வைக்கும் ஆதாரங்களும், உண்மைகளும் கோர்ட்டில் நீதிபதி முன்பாக ஒரு வழக்கறிஞர் பாயிண்ட் பாயிண்டாகச் சொல்லி வாதாடுவது போலிருக்கும். பெரியாரின் பேச்சுத் திறனில் மயங்கிப் போன நான் பின்னர் அவர் எங்கே பேசினாலும் அங்கெல்லாம் போய் அவரது பேச்சைக் கேட்டுவிட்டு வருவேன்' - இப்பகுதிகளை இந்நூலில் படிக்கும் பொழுது பெரியார் மீது சாவி கொண்டுள்ள மதிப்பு புலனாகும். தந்தை பெரியார் அவர்களுடன் மட்டுமல்ல, பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர் ஆகியோருடனும் அன்பு கொண்டிருந்த திரு. சாவி அவர்கள் அப்பெருமக்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளவர் என்பது இந்நூலின் மூலம் ஆங்காங்கே விளக்கம் பெறுகிறது. நண்பர் சாவி அவர்களுடன் எனக்கு ஏற்பட்ட நட்புப் பிணைப்புகளை எண்ணி அடிக்கடி நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/8&oldid=824899" இலிருந்து மீள்விக்கப்பட்டது