பக்கம்:சாவி-85.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் நினைக்கிறேன். ஆனாலும் அதை உங்களிடம் வெளிப்படையாகச் சொல்லவும் மாட்டார். ஒருவேளை அப்படிச் சொன்னால் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்னைக் கைவிட்டு விடுவீர்களா?” என்று சின்ன அண்ணாமலையிடம் கேட்டார் சாவி. 'உங்களுக்கு வாக்கு கொடுத்து விட்டதாகவும் பேச்சு மாறுவதற்கில்லை என்றும் சொல்லி விடுகிறேன். அதற்கு மேல் அவர் வற்புறுத்த மாட்டார் என்றார் சின்ன அண்ணாமலை. சாவி எதிர்பார்த்தது போலவே நடந்தது. மறுநாள் காலை பதினோரு மணிக்கு சின்ன அண்ணாமலையைத் தம் வீட்டுக்கு அழைத்து 'சாவி கல்கியிலிருந்து விலகி விட்டார் தெரியுமோ, சொன்னாரா?' என்று விசாரித்திருக்கிறார் கல்கி. "ஆமாம், சொன்னார்' என்று பதில் சொல்லியிருக்கிறார் சின்ன அண்ணாமலை. 'ரொம்ப நாளாக உங்ககிட்டே சொல்லணும்னு இருந்தேன். 'தீபம்’ என்ற பெயரில் மாதப் பத்திரிகை ஒன்று ஆரம்பித்து நடத்துங்கள். நான் அதற்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்கிறேன்' என்று கல்கி தீபத்துக்கு தூபம் போட்டு அனுப்பி இருக்கிறார். கல்கியிடம் பேசி விட்டு வந்தபின் சின்ன அண்ணா மலையின் பேச்சில் ஸ்வரம் இறங்கியிருந்தது. வெள்ளி மணி ஆரம்பிப்பதில் சுவாரசியம் குறைந்திருந்தது. "நாம் முதலிலேயே போட்ட பிளான் என்ன? வெள்ளி மணிதானே? அதைத் தொடங்கியே ஆக வேண்டும்' என்று சின்ன அண்ணாமலையிடம் கண்டிப்பான குரலில் அடித்துப் பேசினார் சாவி. சின்ன அண்ணாமலை அதற்கு மேல் எதுவும் பேசாமல் வெள்ளி மணி தொடங்கச் சித்தமாகி விட்டார். வெள்ளி மணி முதல் இதழ் விரைவிலேயே வெளி வந்தது. ரசிகமணி டி.கே.சி. அவர்களின் படத்தை முதல் 79

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/89&oldid=824909" இலிருந்து மீள்விக்கப்பட்டது