பக்கம்:சாவி-85.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் இந்தச் சமயத்தில்தான் செட்டியார் மகள் லட்சுமிக்கு, தேவகோட்டையில் இயங்கி வந்த ஏ.வி.எம். ஸ்டுடியோவில் தடபுடலாக திருமணம் நடத்த ஏற்பாடாகி இருந்தது. கல்கியின் யோசனையின் பேரில் சாவி, சின்ன அண்ணாமலை இருவருக்கும் திருமண அழைப்பு அனுப்பியிருந்த ஏ.எவி.எம். அவர்கள் கல்கி, முசிறி சுப்பிரமணிய ஐயர் ஆகியோருடன் இவர்களுக்கும் சேர்த்து ரயிலில் முதல் வகுப்பில் இடம் ரிசர்வ் செய்திருந்தார். காலை பத்து மணிக்குள் திருமணம் முடிந்து விடும். பதினோரு மணிக்கு விருந்து. அந்த இடைவெளியில், தேவ கோட்டையில் செட்டியாருக்குச் சொந்தமான ராஜாஜி பிரஸ்ஸைப் போய்ப் பார்த்து எந்த மெஷின் தேவையோ அதை வெள்ளி மணிக்கு அனுப்பி வைப்பதாகச் செட்டியார் சொல்லியிருந்தார். அதன்படியே முகூர்த்தம் முடிந்ததும் கல்கி, சாவி, சின்ன அண்ணாமலை மூவரும் ராஜாஜி பிரஸ்ஸுக்குப் போய் மெஷின்களைச் சுற்றிப் பார்வையிட்டார்கள். அப்போது கூடத்தின் சுவருக்கும், அதன் பக்கத்தில் இருந்த மெஷினுக்கும் இடையே உள்ள இடைவெளியில் மூவரும் மெஷினைப் பார்த்தபடி நடந்து கொண்டிருந்தார்கள். அப்போது சட்டென்று பின்னால் திரும்பிய கல்கி அவர்கள் "இன்னும் பத்தே நாளில் வெள்ளி மணிக்கு வந்து விடுவேன்' என்று சொன்ன போது சாவி மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார். சற்றும் எதிர் பாராத இந்தச் செய்தி சாவியை அன்று இரவு தூங்க விடவில்லை. அச்சுக் கூடத்தில் இருந்த இயந்திரம் ஒன்றை அடையாளம் சொல்லி ‘இதைச் சென்னைக்கு அனுப்பி விடலாம்’ என்று செட்டியாரிடம் சொல்லிவிட்டு வந்ததுதான் தாமதம். ஒரே வாரத்தில் மெஷின் சென்னை வந்து அப்போதைய ஹிண்டு ஆபீஸுக்குப் பின்புறம் உள்ள தாயார் சாகிப் தெருவில் ஒரு கட்டடத்தில் தயாராக நின்றது. அதுவரை, அரண்மனைக்காரன் தெருவில் இருந்த ராஜா 83

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/93&oldid=824914" இலிருந்து மீள்விக்கப்பட்டது