பக்கம்:சாவி-85.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் இருந்ததால் நஷ்டம் தாங்க முடியாமல் அதையும் சில மாதங்களுக்குள்ளாகவே நிறுத்தும்படி ஆயிற்று. கல்கியில் மறுபடியும் வேலைக்கு முயன்றார் சாவி. ஒரு நாள் சதாசிவம் அவர்களை நேரில் போய்ப் பார்த்தார். முன்பு கல்கியிலிருந்து ராஜினாமா செய்ததை நினைவுபடுத்தி 'அவசரப்படாதேன்னு நான் அப்பவே சொன்னேன். நீதான் கேட்கலை. இப்ப என்னாலே ஒன்றும் செய்வதிற்கில்லை' என்று பக்குவமாகவும் அன்போடும் பேசி அனுப்பி விட்டார் சதாசிவம். அடுத்த சில தினங்களுக்குப் பின் கல்கி அவர்களையே பார்த்து வேலை கேட்டபோது, 'கல்கியில் இப்போது வாய்ப் பில்லை. நான் ஒரு லெட்டர் தருகிறேன். சுதேசமித்திரன் ஆசிரியர் சி.ஆர்.சீனிவாசனைப் போய்ப் பார் என்று சாவி மீதிருந்த அன்பையும், அக்கறையையும் வேறுவிதமாக வெளிப் படுத்தினார் கல்கி. அப்போது பத்திரிகை உலகில் மூன்று சீனிவாசன்கள் பிரபலம். ஹிந்து பத்திரிகை - சீனிவாசன், ஆனந்த விகடன் - சீனிவாசன் (எஸ்.எஸ்.வாசன்), சுதேசமித்திரன் - சீனிவாசன். தி டிரினிடி ஆஃப் மவுண்ட் ரோட் என்று இந்த மூவரையும் சொல்வார்கள். சுதேசமித்திரன் ஆசிரியர் சீனிவாசனிடம் சாவி தம் நிலைமையைச் சொல்லி வேலை கேட்டபோது, அவர் பதிலுக்கு தம்முடைய குறையை இவரிடம் கொட்டித் தீர்த்திருக்கிறார். 'பத்திரிகை நடத்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல. தினம் ஒரு கண்டமாயிருக்கிறது. தினமும் இரவு படுக்கப் போகுமுன் நாளைக்கு பேப்பர் வெளிவருமா என்ற கேள்விக் குறியோடுதான் போகிறேன். இருந்தாலும் கல்கி லெட்டர் கொடுத்திருக்கிறார். உன் திறமை பற்றி நிறைய எழுதி 87

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/97&oldid=824918" இலிருந்து மீள்விக்கப்பட்டது