பக்கம்:சாவி-85.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 இருக்கிறார். அவர் சொல்வதால் உனக்கு வேலை தருகிறேன். ஆனால், சம்பளம் அதிகம் எதிர்பார்த்தால் முடியாது. நூறு ரூபாய்தான் தர முடியும். யோசித்துச் சொல்' என்றார். "யோசிப்பதற்கு ஒன்றுமில்லை. நூறு ரூபாய் போதாது. உங்கள் சிரமம் எனக்குப் புரிகிறது. நன்றி. நான் வருகிறேன். என்று சொல்லிவிட்டுத் திரும்பி விட்டார் சாவி. இதற்குப் பிறகு துமிலன் ஒருநாள் சாவியின் வீடு தேடி வந்து, 'தினமணி கதிரில் உதவி ஆசிரியர் வேலை காலி இருக்கிறது. 125 ரூபாய்தான் சம்பளம் தருவார்கள். நாளைக்கே வந்து சேர்ந்து கொள்' என்றார். வேறு வழியின்றி தினமணி கதிரில் சேர்ந்தார். அப்போது துமிலன் அதன் ஆசிரியர். ஒரு வருடம் ஆனதும் இங்க்ரிமெண்ட் கேட்டார் சாவி. தருவதற்கில்லை என்றது நிர்வாகம். மறுநாளே ஆஃபீஸுக்குப் போகாமல் நின்று விட்டார். மறுநாளே துமிலன் சாவியின் வீடு தேடி வந்து "ஏன் வரவில்லை?" என்று கேட்டார். சம்பளம் போதாது என்றார் சாவி. 'உனக்குத் தெரியாதா? கோயங்கா இதற்கு மேல் தரமாட்டார் என்றார் துமிலன். "இந்தக் குறைந்த சம்பளத்தில் என்னால் குடும்பம் நடத்த முடியவில்லை. சி.சு.செல்லப்பாவுக்கு அதிகச் சம்பளம் தருகிறீர்களே, அதே சம்பளம் எனக்கும் கொடுக்கலாமே" என்று சாவி கேட்க, 'அது சாத்தியமில்லை என்றார் துமிலன். 'அப்படியானால் என்னாலும் சாத்தியமில்லை" என்று சாவி கூறி விட்டார். துமிலனுக்கு இதில் வருத்தம்தான் என்றாலும் அவரால் அதிகச் சம்பளம் தர இயலாத நிலைமையைச் சாவி அவர்கள் நன்கு புரிந்து கொண்டிருந்த காரணத்தால் நீங்கள் வருத்தப்பட வேண்டாம். எனக்கு இதில் வருத்தமில்லை. போய் வாருங்கள் என்று சொல்லி அனுப்பி விட்டார். . அச்சமயம் சாவி அவர்களின் தந்தை கிராமத்திலிருந்த நிலத்தை விற்று அதில் கொஞ்சம் பணம் கொண்டு வந்து 88

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/98&oldid=824919" இலிருந்து மீள்விக்கப்பட்டது