பக்கம்:சாவி-85.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் மகனிடம் கொடுத்தார். அந்தக் கொஞ்சம் ரொம்ப நாள் கைகொடுக்கவில்லை. இந்தக் காலகட்டத்தில்தான் ஒரு நாள் சின்ன அண்ணா மலை சாவியின் வீடு தேடி வந்தார். வெள்ளி மணி நடத்தியதில் இருவருக்குமிடையே மனக்கசப்பு ஏற்பட்டு பேச்சுவார்த்தை இல்லாமலிருந்த நேரம் அது. திடுதிப்பென்று அவர் தன் வீடு தேடி வந்து நின்றதைப் பார்த்தபோது சாவிக்கு ஒன்றும் புரிய வில்லை. சின்ன அண்ணாமலை அவர்கள் முழுசாக ஒரு நூறு ரூபாய் நோட்டை சாவியின் கையில் திணித்து 'இந்தாங்க, பிடியுங்க அட்வான்ஸ் கிளம்புங்க நாம் ரெண்டு பேரும் குஸ்தி நடத்தப் போகிறோம்' என்று ஒரு புதிரைப் போட்டார். 'ஏற்கெனவே ஒருவருக்கொருவர் குஸ்தி போட்டுக் கொண்டு பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்து வருகிறோம். இப்போது மீண்டும் ஒரு குஸ்தியா? அதுவும் நூறு ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து சண்டைக்குக் கூப்பிடுகிறாரே! என்று சாவி குழம்பிப் போனார். 'குஸ்தியா? நீங்களும் நானுமா? என்ன புதிர் போடlங்க?" சின்ன அண்ணாமலை சிரித்துக் கொண்டே விளக்கமாகச் சொன்னர்ர். செட்டி நாட்டைச் சேர்ந்த நாராயணன், சண்முகம், தியாகராஜன் என்ற மூன்று செல்வந்தர்கள் கிங்காங் - தாராசிங் மல்யுத்தப் போட்டியைத் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நடத்தப் போகிறார்கள். அவர்களுக்கு ஒத்தாசையாக நாம் இரண்டு பேரும் சேர்ந்து வேலை செய்யப் போகிறோம். பப்ளிசிடி பொறுப்பு நம்முடையது. அடுத்த வாரமே மதுரைக்குப் புறப்படனும். அங்கேதான் முதல் மல்யுத்தப் போட்டி நடக்கப் போகிறது' என்றார். மதுரை புறப்படுமுன், போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய சின்ன 'புக்லெட்' ஒன்றை 89

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/99&oldid=824920" இலிருந்து மீள்விக்கப்பட்டது