பக்கம்:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மூன்றாம்பதிப்பு.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்



சாமி சொன்னார்.'செருப்புத் தைக்கும் சமூகத்திலும் மீன் பிடிக்கும் சமூகத்திலும் பிறந்த இரண்டு தொழிலாளர்கள், அமெரிக்கச் சர்க்காரால் தண்டிக்கப் பட்டார்கள் தொழிலாளர் சமூகம் விழிக்குமுன்பு, இத்தகைய சம்பவங்கள் பல நிகழவேண்டும். நமது நாட்டுத் தொழிலாளர் உலகம் கண்விழித்து இத்தாலிய மீன்பிடிக்கும், தொழிலாளியான வான்திட்டி இறந்ததைப்போல், நமது உண்மைத் தொழிலாளர் தலைவரான சிங்காரவேலர் இந்நாட்டு வான்சிட்டியாகச் சர்க்காரரல் தண்டிக்கப்பட்டு, அக் கூட்டத்தைக் காண ஆசைப்படுகிறேன்' என்று. இச்சொல் ஒன்றே சிங்காரவேலரைச் சுயமரியாதைக்காரனாக்கியது.

சுயமரியாதை இயக்கம், சமதர்மம், இந்நாட்டு மக்களுக்குத் தக்கபடி எடுத்துச் சொல்லி, 'மார்க்கீசம்' என்பதன் பொருளாதாரத்த தத்துவத்தைச் சாதாரணமானவரும் உணரும்படி செய்த பெருமை இந்நாட்டில் இருவரையே சாரும். மற்ற மாகாண மக்கள் பொது உடைமைத் தத்துவத்தை உணர்ந்திருப்பதற்கும், இம்மாகாண மக்கள் அதிலும் தொழிலாளர் இயக்கம் பொது உடைமையை உணர்ந்திருப்பதற்கும் இன்னும் ஏராளமான வித்தியாசம் உண்டு. மார்க்கீசத்தைக் கரைத்துக்குடித்து, எவரும் எளிதில் உணரும்படி எழுதியும் பேசியும் வந்தவர்கள் பெரியார் இராமசாமி அவர்களும், தோழர் சிங்காரவேலருமே யாகும். தோழர் சிங்காரவேலர் சுயமரியாதை இயக்கம் வளருவதற்குப் பெரிதும் பாடுபட்டார். அவரின் உழைப்பை எந்தச் சுயமரியாதைக்காரனும் மறக்கமாட்டான்.


12