பக்கம்:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மூன்றாம்பதிப்பு.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிஞர் அண்ணாத்துரை



களுக்கும் அவை புரியும்படியாகச் செய்த பெருமைக்குரிய இடத்தில் முன் வரிசையில் முதலிடம் அவருக்கே அளித்தாக வேண்டும்.

ஓயாத படிப்பு; உள்ளத்திலே வேதனை தரும் சகல பிரச்சினைகளும், அவர் சாதாரண காரியம் தேடுவதிலேயே மிகக் கவலை எடுத்துக்கொண்டு உழைத்தார். நுனிப்புல் மேய்வது அவருக்குப் பிடிக்காது. பிரச்சினைகளைப் பூசி மெழுகினால் ஆத்திரப்படுவார்; வீண் ஆரவாரத்தால் மக்களை மயக்கும் இயக்கங்களைக் கண்டிப்பார். கடலோரத்தில் கடைசியில் தானொருவனே உலாவுவதனாலும், கடைசியில் கொள்கையின் தோழமை ஒன்று இருந்தால் போதும் என்று கருதினார் ஏறக்குறைய, கடைசிக் காலத்தில் அவர் தனி மனிதர் போலவே நின்றார். அந்த முதியவர் எவ்வளவு உயரமான, புரட்சிகரமான கருத்துகளைத் தாங்கிக்கொண்டு இருந்தார் என்பதை எண்ணும்போதே ஆச்சரியம் உண்டாகும்.

"பேய் பூதம் பிசாசு உண்டா?... என்று கேட்டுவிட வேண்டியது தான். பேய் பூதம் பிசாசு என்ற சொல் எப்பொழுது உபயோகத்திலே கொண்டு வரப்பட்டது என்பதிலிருந்து தொடங்கி, இன்று, பிறன் உழைப்பைக் கொண்டு வாழ்பவனே உண்மையான பேய் என்கிற வரையிலே கூறிவிடுவார்; சந்தேகங்களைத் தெளியவைக்கும் முறையிலே, அவருடைய மனம், ஒரு சிறந்த அகராதியாக இருந்தது. அப்படிப்பட்டவரின் மறைவு, சர்வ சாதாரணச் செய்தியாகிவிட்டது. இந்த நாட்டிலே எண்ணற்ற


7