பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

79



குறையறிவு

அழகானவை, விருப்பத்தை உண்டாக்கக் கூடியவை எல்லாம் மனிதனால் அடைய முடியுமா என்பதைக் கண்டறிவதே நுண்ணறிவு.

மனிதனுக்குத் தீயவை தேவை இல்லை. கெடுதிகளைத் தாங்கிக் கொள்ள வேண்டிய இன்றியமையாமை இல்லை. இருந்தும் பல சட்டங்கள் மூலம் பல தீமைகள் உண்டாகின்றன. பல தீர்ப்புகள் குற்றங்களை வளர்த்து வருகின்றன.

அதிகாரிகள் நாட்டைப் பாதுகாக்க வேண்டியவர்கள். ஒரு குற்றமற்றவன் தண்டிக்கப்படுவது, பத்துப்பேர் தப்பித்துக் கொள்வதைவிட இழிவானது. மக்களின் எண்ணிக்கை மிகும்போதும் மிகையாகப் பிள்ளைகளைப் பெற்று விட்டாலும் வாளின் மூலம் வாழ்வளிக்க முடியாது. யார் உயிரையும் பறித்து வாழ்வைத் தேடிக் கொள்ள இயலாது.

அறத்தை நிலை நாட்டத் தவறுகள் செய்தே தீரவேண்டும் என்று வாதாடாதே. துன்புறுத்துவதன் மூலம் குற்றவாளி உண்மையை வெளிப்படுத்தி விடுவான் என்று நினைப்பது தவறாகும். அப்படிச் செய்தால் நீயும் குற்றவாளியாகிவிடுகிறாய்.

ஐயப்பாடு ஏற்பட்ட ஒரே காரணத்திற்காகயாரையும் கொடுமை செய்திடாதே. அதன் மூலம்