பக்கம்:சுவரும் சுண்ணாம்பும்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னன் துஷ்யந்தன் மனைவி சகுந்தலை

மாளிகை தன்னில் மான்வளர்த் தாளாம்.

வரதுங்க ராம பாண்டியன் மனைவி

மரகதப் பச்சை மயில்வளர்த் தாளாம்.

காவல் காக்கவும் ஆவல் தீர்க்கவும்

நடிகைகண் ணாம்பா நாயொன்று வளர்த்தார்.

விமானப் பணிப்பெண் வேலையில் இருந்த

காலத்தி லிருந்தே நடிகை காஞ்சனா, நல்ல ஜாதி நாய்க்குட்டி வளர்க்கிறாள்.

அழகி ஜமுனா அணிற்பிள்ளை வளர்க்கிறார். வெண்ணிலா மிதக்கும் வேளையில், ஜமுனா கண்ணுறங் குவதோ கட்டில் ஒன்றிலாம். அவரது வீடே 'அணிலாடு முன்றிலாம்.