32
வரலாற்று நாவல்கள் வரைந்து காட்டினர். இன்றும் நாட்டில் இலக்கிய நயத்தொடு வரலாற்று நாவல்கள் வளர்வதைப் பார்க்கிறோம்.
சிறுமீன் கதைகளும் திமிங்கில நாவலும், மு.வ. எழுதலாம்: மு.க. எழுதலாம், மணியன் எழுதலாம்; மாயாவி எழுதலாம், அகிலன் எழுதலாம், ஆர்.வி. எழுதலாம், சாண்டில்யன் பார்த்த சாரதி எழுதலாம்.
காம ராசர் கவிதை எழுதினால், பக்த வத்சலம் பதவுரை எழுதினால், சிலம்புச் செல்வர் சிறுகதை எழுதினால், எடுபடும் என்றா எண்ணுகின் றீர்கள்? - அடிபடும்! அத்துடன் அவர்கள் இதுவரை பெற்றசெல் வாக்கும் பெருமூச்சு வாங்கும் !
தீக்குச்சி மருந்துபோல் தேகம் கறுத்துள நடிகை வாணிஸ்ரீ நாள்தோறும் வீட்டில் குடிப்பது பாலாம் படிப்பது நாவலாம் !
பழைய புராணம் படிப்பதைக் காட்டிலும் நாவல் படிப்பது நல்லதே. எனினும், திருக்குறள் படித்தால் திருந்தி வாழலாம் ! இருட்டறை நாவல்கள் எத்தனை படிப்பினும் வழுக்கி விழுந்தோர் மாற முடியுமா?
சாக்கடை நூல்களைச் சாத்திரம் என்போர் பூக்கடை நூல்களைப் புரட்டுவ தில்லையே.