பக்கம்:சுவரும் சுண்ணாம்பும்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 பதிப்புரை

 சுவருக்குக் கண்கள் இல்லை!  ஆனால் அதற்குக் காதுகள் மட்டும் உண்டு.
 உலகில் இதுவரை, சுவரும் பேசியதில்லை. சுண்ணாம்பு வாய் திறந்ததில்லை ! ஆனால் உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் படைப்பாகிய இந்தச் "சுவரும் சுண்ணும்பும்"பேசுகின்றன இல்லை, பாடுகின்றன !
 நடிகையின் வாக்குமூலத்தை வைத்தே நல்ல இலக்கியம் படைக்கலாம் என்பதற்கு இந்த நூல் ஓர் எடுத்துக் காட்டாகும். 
 உறங்காத கருத்துக்கள் அமைந்துள்ள ஒன்பது பாடல்களை ஒன்று சேர்த்துச் சுவரும் சுண்ணும்பும் என்னும் தலைப்பில் இதனை எங்கள் பதிப்பகத்தின் முதல் வெளியீடாகப் படைக்கிறோம்.
 இந்நூலை அழகுபட அச்சாக்கித் தந்த என் நண்பரும் இலக்கியச் சித்தருமான தங்கவயல் லோகிதாசனுக்கும், ஓவியர்

உபால்டு அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 இதனை அடுத்து, உவமைக் கவிஞரின் நூல்கள் தொடர்ந்து வெளிவரும்.
          கவிஞர் கல்லாடன்
          உரிமையாளர் 
          சுரதா பதிப்பகம்