பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/37

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

களைச் செய்தால் மாத்திரம் சிரமம் ஏற்படுமே யொழிய தொந்திரவு ஏற்படாது. மந்திரங்களைக் கூறிக்கொண்டு நமஸ்காரங்களைச் செய்தால் மிகுந்த பலன் உண்டாகும். தவிரவும் மந்திரங்களைக் கைக்கூப்பிக்கொண்டு நின்று கொண்டே உச்சரிக்க வேண்டும். குனியும் பொழுதும், பிராணாயாமம் செய்யும் பொழுதும், எழும்பொழுதும் சுவாஸ உச்சுவாஸங்களை (Inhaling and exhaling) மூக்கின் வழி யாகச் செய்ய வேண்டும். மந்திரங்களை உச்சரிப்பதனால் ஆரோக்கியம் அதிகமாகுவது:- ஓம் ஹ்ராம். ஹ்ரீம் முதலிய இந்த பீஜ மந்திரங்களுக்கு யாதொரு அர்த்தமும் இருக்காது என்று நீங்கள் நினைக்கலாம். இவைகளால் சரீரம் புஷ்டியடைவதல்லாமல் ஞானாபிவிருத்தியும் உண்டாகும். அன்றியும், அவைகளால் இருதயம், இரைப்பை, மூளை முதலிய அவயவங்களுக்கு வியாதி ஏற்படாமலும் வியாதி யிருந்தால் குணம் அடையும் படியும் செய்யும். (1) ஓம் - இந்த பவித்ரமான ஸ்வரமானது பிராணாயாமத் தின் பிரதியொரு மந்திரத்தின் முதலிலும் சில சந்தர்ப்பங்களில் மந்திரங்களின் ஒவ்வொரு எழுத்தின் பின்னும், பலதரங்களில் மந்திரங்களின் ஆதியிலும் முடிவிலும் வருகின்றது. வேதங்களின் சாரம் எல்லாம் இதில் சேர்ந்திருக்கிறதென்று பாவிக்கப்பட்டிருக்கிறது. (ஓம் இத்யே காட்சரம் பிரம்ம வியாஹான் மாமனுஸ்மான் யஹ ப்ரயாதி த்யஜன் தேஹம்ஸமாதி பரமாம் கதிம். கீதை.) "ஓம் என்ற பீஜாட்சரம் நமஸ்காரங்களின் ஒவ்வொரு பிஜ மந்திரத்தின் முதலிலும் வரும். இதனால் இருதயத்தின் காரியங்கள் கிரமமாக அபிவிருத்தியடையும். அன்றியும் மூளையையும், இரைப்பையையும் உத்தீபனம் (எழுச்சி) செய்கின்றது. எல்லா பீஜ மந்திரங்களைப் போலவே இதையும் மிக தீர்க்கமாக (அதாவது, ஓ ஓ ஓ ம்ம்ம்) உச்சரிப்பதனால் குணம் உண்டு. (2) பிறகு ஹ்ராம் என்கிற பீஜாட்சரம் வருகின்றது. இதில் எல்லா எழுத்துக்களும் தீர்க்கமாக இருக்கின்றன. இதை 'ஹ்ரா அ அ அ ம்ம்ம் என்று உச்சரிப்பதே கிரமமானது. ”ஹ என்ற மஹா பிராணாட்சரமானது இருதயத்தினின்று புறப்படுகின்றது. ஆகையால் "ஹராம் என்பதை உச்சரிக்கும் பொழுது இருதயமானது பலமாக ஆடுகின்றது. சுத்த இரத்தமானது இருதயத்திலிருந்தே எல்லாபாகங்களுக்கும் பரவவேண்டியதாயிருக்கிறது. வியாதி பீடிக்கப் பட்டுள்ள பாகங்களுக்குச் சுத்த இரத்தமானது அதிகமாகச் சென்று கொண்டிருந்தால், அது விஷகல்மஷங்கள்