பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/41

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

(4) ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரைம் ஹ்ரௌம் ஹ்ரஹ, ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரைம் ஹ்ரௌம் ஹ்ரஹ, மித்ர-ரவி சூர்ய --பானு-க்க- பூஷ-ஹிரண்யகர்ப - மரீசியா தித்ய-ஸவித்ரார்க்க - பாஸ்கரேப்யோநமஹ. இப்படி மூன்று முறை உச்சரிக்க வேண்டும். (5) ஓம் ஸ்ரீ ஸவித்ரே ஸுர்யநாராயணாய நமஹ என்ற இத்துடன் முதல் சுற்று அதாவது 25 நமஸ்காரங்களாகும். ரிக்வேதத்தையும், யஜுர்வேதத்தையும் அனுசரிக்கின்றவர்கள் ஓம் ஹ்ராம், ஹ்ரீம் முதலிய பீஜாட்சரங்களுடன் வேத மந்திரங்களையும் உச்சரிக்கின்றார்கள். இதனால் நமஸ்காரங்களைச் செய்வதற்கு அதிக காலம் பிடிக்கும். ஆனால் இப்படிச் செய்வதனால் நீங்கள் பலப்படுத்தவேண்டும் என்று நினைத்துள்ள சரீரபாகங்களுக்கு மிக்கபிரபாசமும் திரட்சியும் ஏற்படும். வேதமந்திரங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள் ஒவ்வொரு நமஸ்காரத்திலும் தங்கள் மனதையும், சித்தத்தையும் ஒருமிக்கவைக்க வேண்டும். அப்படிச் செய்தாலொழிய அவர்களுக்கு இந்நமஸ்காரங்களால் முழுப்பலன் உண்டாகாது. ஒவ்வொருவனும் சூர்ய நமஸ்காரங்களைத் தனக்காகவும், தன்னுடைய கூட்டத்தாருடைய நன்மைக்காகவும் செய்யவேண்டுமான ஒரு மதகாரியம் என்று கருதவேண்டும். ஆகையால் சாதாரணமாய் சரீரபுஷ்டிக்காகச் செய்யும்படியான இதர விதமான தேகப்பயிற்சிகள் விஷயத்தில் அனுசரிக்கும்படியான உணவின் நியமத்தை சூர்ய நமஸ்காரங்களைச் செய்யுங்கால் அனுசரிக்கக்கூடாது. நமஸ்காரங்களைச் செய்து முடித்த ஒரு மணி நேரத்திற்கு மேல் ஒரு ஆழாக்கு அல்லது கால்படிபசுவின்பாலை நுரையுடன் குடித்துவந்தால் குணம் ஏற்படும். ஆனால் பாலைக்கட்டாயமாய் குடித்துவர வேண்டு மென்ற கட்டளை இல்லை. தினந்தோறும் இரண்டு வேளை உணவை மாத் திரம் உட்கொண்டு நடுவில் வேறு சிற்றுண்டிகளைத் தின்னாமலிருப்பது மிகவும் நல்லது. ஆகையால் சூர்ய நமஸ்காரங்களைச் செய்பவர்களுக்கு அமிதமான உணவினால் ஏற்படும் அஜீர்ணம் முதலிய யாதொரு நோயும் சம்பவிக்காது. சூர்ய நமஸ் காரங்களைத் தினந்தோறும் செய்து வருவதனால் சரீரமானது பலத்தையும் சுகத்தையும் அடையும் என்பதை நாம் கூறவேண்டியதே இல்லை. எனவே இந்நமஸ்காரங்களைப் பிரதிதினமும் செய்யவேண்டியது அவசியமாகின்றது.