பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/69

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வளவு குறைச்சலாக உணவை உட்கொள்ளுகிறீர்களோ அவ்வளவு நல்லது. சாதாரணமாக ஒருமனிதன் உட்கொள்ளும் அரைப்பங்கு ஆகாரமே அவனுக்கு உண்மையாகத்தேவையாகுவது. சூர்ய நமஸ்காரங்களைப்போலவே தினந்தோறுஞ் செய்யத்தக்க கிரமமான தேகப்பயிற்சியுடன் ஆரோக்கியகரமான ஆகாரத்தை மிதமாக எடுத்துக்கொள்ளவேண்டும். இந்த ஆகாரத்தை நன்றாக அரைத்து தின்ன வேண்டும். பசிக்கும் பொழுது மாத்திரம் சாப்பிடவேண்டும். இவைகளுடன் அவ்வப்வொழுது ஒருவேளையோ அல்லது முழுநாளோ பட்டினி கிடக்க வேண்டும். பட்டினி கிடப்பது ஒவ்வொரு திங்கடகிழமை, செவ்வாய்க்கிழமை தவிர பகுள சதுர்த்தி வருஷத்தில் உபவாசஞ்செய்ய வேண்டிய முக்கிய தினங்கள் முதலிய இந்நாட்களில் நான் ஒருவேளை தான் சாப்பிடுகிறேன். நவராத்ரியில் ஒன்பதுநாளும் பழம், நுரையுடன் கூடிய பசும்பால் முதலிய இவைகளை உட்கொள்ளுகிறேன். உப்பு, சர்க்கரை முதலியவைகளையுபயோகிப்பதே கிடையாது. சாதுர்மாசங்களில் ஒன்றிரண்டு மாதங்களில் கிலுப்தமான ஆகாரத்தை மாத்திரம் உட் கொள்ளுகிறேன் . எங்களுடைய இராணியின் அனுபவம். எங்களுடைய வழக்கப்படிச் சூரிய நமஸ்காரங்களைச் செய்து வரும் பெண்களும் ஸ்திரீகளும் ஆரோக்கியமாகவும், மனச்சாந்தமா கவும் இருப்பார்கள். சூர்ய நமஸ்காரங்களால் எங்களுடைய இராணிக்கு ஏற்பட்டிருக்கும் பிரயோஜனங்களில் சிலவற்றை அடியில் குறிப்பிடுகிறோம் : - (1) அவள் சூரிய நமஸ்காரங்களைச் செய்யத்தொடங்கி மூன்று வருஷங்களாயின. அதற்குமுன் அவள் ஒருமணி நேரம்வரையில் உட் கார்ந்துகொண்டு படித்தாலுஞ்சரி, காரியஞ் செய்தாலுஞ்சரி அவள் முதுகின் மேல்பாகத்தில் வலி ஏற்பட்டுக்கொண்டிருந்தது. இப்பொழுது எவ்வளவு நேரம் உட்கார்ந்து கொண்டு படித்தாலுஞ்சரி, காரியங்களைச் செய்தாலுஞ்சரி அவளுக்கு நோவு உண்டாகிறதில்லை. (2) அவ்வப்பொழுது வயிற்றுவலி, மலச்சிக்கல் முதலியவை ஏற் பட்டுக்கொண்டிருந்தன. இப்பொழுது ஒருதொந்திரை யுமில்லை. (3) இதனைத் தொடங்கினது முதல் மாதவிடாய் முதலிய வற்றால் ஏற்படும் இன்னல்கள் அறவே யொழிந்தன. ஆனால் இதற்கு முன் மிக்கவலியும் எட்டு நாள் வரையில் விடாமல் இரத்தசிராவமும் ஏற்பட்டுக்கொண்டிருந்தது. இப்பொழுது ஒன்றுமில்லை.