பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/77

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

செய்ய வேண்டிய தேகப்பயிற்சி பெண்களுக்குத் தேவையாயிருக்கின்றது. இவ்வுத்தேசத்திற்குச் சூர்ய நமஸ்காரங்கனின் கிரமமே சிரேஷ்டமானது. இதைப் பெண்கள் பக்திச் சிரத்தையுடன் தினமும் செய்துகொண்டுவந்தால் அவர்களுக்கு மாத்திரமன்றி இனிமேல் வரப்போகின்றவர்களுக்கும் மிக்க உன்னதமான பலன்களேற்படும் ; ஏனென்றால், இக்காலத்துப் பெண்களே இனிமேல் தாய்மார்களாக ஆகுபவர்களாவர். இவ்விஷயமாக 1927ஆம் வருஷத்திய பிப்ரவரி மாதத்து "பிசிகல்கல்சர் என்னும்பத்திரிகையில் ஜர்மனி ராஜ்யத்து அரசாயிருந்த கெயிசர் என்பவர் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்:- "இனி மேல் ஸ்திரீகளின் சரீர புஷ்டிக்கு அதிக கவனத்தைக் கொடுக்க வேண்டியதாயிருக்கிறது. யுத்தம் ஏற்படும் பொழுது ஸ்திரீகளுங் கூட தகுந்த மட்டும் தேகச்சிரமமெடுத்துக் கொள்ள வேண்டு மென்பது பெரிய யுத்தத்தின் அனுபவத்தினால் எங்களுக்குத்தெரிய வந்திருக்கின்றது. யுத்தகாலத்திலாகிலுஞ்சரி சாந்தமாயிருக்குங் காலத்திலாகிலுஞ் சரி, ஸ்திரீகளும், புருஷர்களும் தங்கள் தங்கள் காரியங்களை அதிகப் பொறுப்புடன் வகித்துக் கொள்வதற்குத் தயாராக இருக்கவேண்டும். ஸ்திரீகள் யுத்தகளத்திற்குச் சென்று யுத்தஞ் செய்ய வேண்டிய சந்தர்ப்ப மில்லாவிட்டாலும், புருஷர்களுடன் கூட ஸ்திரீகளும் சரீரத்தைப் புஷ்டி யடையும்படிச் செய்து கொண்டு தேபயிற்சி செய்யவேண்டிய தென்பதை உலகத்திலுள்ள ஆண் பெண் இரு திறத்தாருக்குத் தெரிவிக்க வேண்டியதா யிருக்கிறது. சூர்ய நமஸ்காரங்களினால் இன்னொரு முக்கியமான குணமுண்டு. சரியான மேல் தணிக்கையினால் அநேக மாணவர்களும் பெண்களும் ஒரேகாலத்தில் ஒன்றாகச் சேர்ந்து நமஸ்காரங்களைச் செய்ய முடியும். இதனால் அவர்களெல்லாம் சரியாக நமஸ்காரங்களைச் செய்வதில் உறுதிப்படுவது மன்றி காலமும் கூடிவரும். அவரவர்களுடைய வயது, உயரம் அல்லது சாமர்த்தியத்திற்குத் தகுந்தவாறு கிரமமாக அவர்களை வரிசைப்படுத்தி நிறுத்தி வைக்கலாம். இவ்விஷயத்தில் சூர்ய நமஸ்காரங்க ளவ்வளவு சிறந்த வேறுயாதொரு தேகப்பயிற்சியுமில்லை யென்பதை ஒளந்து சமஸ்தானத்திலுள்ள எல்லாப் பள்ளிக்கூடங்களில் ஐந்து வருஷங்களாகச் செய்து வரும் அனுபவத்தினால் எங்களுக்கு உறுதி ஏற்பட்டிருக்கின்றது.