பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/84

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வஸ்துவில்லாத ஆகாரங்களினாலேயே அவைகள் ஜீவித்து வரும் பொழுது ஆரோக்கியத்திலும் பலத்திலும் மிக்க தாழ்வடைந்திருந்தன. பிறகு விட்டாமீன்பி" சேர்ந்த ஆகாரத்தைக்கொடுத்தவுடன் அவைகள் மிக்க புஷ்டியை அடையத் தொடங்கின. "அதிகமாய்த் தின்பதை விடவேண்டும்; இயமனுக்கு இதரர் விஷயத்தில் ஒருவாய் இருந்தால் உங்கள் விஷயத்தில் மூன்று வாய்கள் இருக்கும் என்பதை நன்றாக மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள் எதி டைம்ஸ் ஆப் இண்டியா 'பம்பாய், 1926– நவம்பர் மீ.6) (The Times of India, Bombay 6th November, 1926.) சரியான உணவு. சம்பூர்ணமான ஆரோக்கியமும் சிரேஷ்டமான சக்தியும் பொதுவாக ஜனங்களுக்கெல்லாம் ஏற்படும்படித் தகுந்த உபாயத்தைக் கண்டு பிடிக்க வேண்டியது முக்கியமா பிருக்கின்றது. சரீரமும் எல்லா இந்திரியங்களும் சரியான படிக்குக் காரியங்களைச் செய்யும்படி ஜீவன ஸ்திதியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இவைகளில் ஆகாரம், போஷிப்பு (nutrition) முதலியவைகளின் மேல் மிக்க கவனத்தைச் செலுத்தவேண்டியதா யிருக்கிறது. சரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல உணவுகளே சரீரத்திற்குத்தேவையானவை. கடினமான இயற்கை விதிகளைச் சரியாக அனுசரித்து வந்தால் மாத்திரம் தான் உண்மையான தேக ஆரோக்கியம் ஏற்படும். விருட்சங்களுக்கும், மிருகங்களுக்கும் முக்கியமாயுள்ள சில நியமங்கள் கனமானவே தசக்தியுடன் கூடிய மனுஷ்யனுக்கும் கூட அவசியமா யிருக்கின்றன. மனிதன் தன்னுடைய புத்தி சக்தியினால் ஸ்வதந்திரனாய்த் தன்னுடைய உயிர்வாழ்க்கையில் ஏற்படக் கூடிய சில அபாயங்களை விலக்கத்தக்கவனாயிருக்கிறான். நம்முடைய நகரங்களில் குழந்தைகளின் மரணத்தொகை (In fant mortality) அதிகமாயிருக்கின்றது. ஸ்திரீ புருஷர்களில் அநேகர்மிக்க துர்பலமுள்ளவராயிருக்கிறார்கள் விதம் விதமான வியாதிகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் காரண பூதமாக நம்முடைய வாழ்க்கை நிலையில் என்ன குற்றங்கள் இருக்கின்றன வென்பதை அச்சக்தி யினாலறிய வேண்டியது அவசியமா யிருக்கின்றது. இக்காலத்து அனாரோக்கியம், துர்பாக்கியம் முதலியவைகளுக் கெல்லாம் நாம் சகஜமான உணவைவிட்டு கண்ட கண்ட பதார்த்தங்களைத் தின்பதே காரணமென்று தெளிவாய் விளங்குகிறது.