பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/154

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

செந்தமிழ் பெட்டகம்

பற்றிய இவர் கொள்கைகள் பல விளங்குகின்றன. அவற்றில் சில தொல்காப்பியத்திற்கு முதல் நூல் அகத்தி யமே. வடமொழி இலக்கணத்திற்கு தமிழி லக்கணம் மாறு படலாகாது. எனினும் வடமொழி இலக்கணம் வேறு; தமிழிலக்கணம் வேறு ஆகுபெயரும் அன் மொழித் தொகையும் வேறு. குற்றியலுகரம் உகரத்தின் திரிபன்று. நன்னூலாசிரியர். சார்பெழுத்து பத்து என்றது தவறு; மூன்றேயாம். இவர் இவ்வுரையில் கூறும் தொகைநிலைத் தொடர், தொகாநிலைத்தொடர் வேறுபாடும், இடைச் சொல்லின் பெயர்க்காரணம், பாலைத்திணை நடுவுரு நலைத்திணையெனப் பெயர் பெற்றதன் காரணம் போன்ற விளக்கங்ளும் மிகவும் பாராட்டற்குரியன.

தமிழில் மூவாயிரம் ஆண்டுக்கு முன் பிறந்து, இன்னும் இறவாது நின்று நிலவும் பனுவல் தொல்காப்பியர் நூலொன்றேயாம். பஃறுளியாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோட்டுத் தென்பாண்டி நாட்டைக் கடல் கொள்ளு முன் கபாடபுரத்தில் நிலம்தரு திருவிற் பாண்டியன் அவையில் வழங்கிப் பொருவிலாப் பெரு நூல் தொல்காப்பியர் என்பது நமக்குக் கிடைக்கும் அகப் புறச் சான்றுகள் அனைத்தாலும் விளக்கமாகிறது. இதன் பெருந்தொன்மை, நடு நிலைப் புலவர், ஆராய்ச்சி யாளர் எல்லாரும் உடன்படும் நல்ல முடிபு.

முதலில், புற வரலாறுகளால் இந்நூல் 3,000 ஆண்டுகளுக்கு முந்தியதாதல் ஒருவரும் மறுக்கொனா உண்மை. கடல் கோளுக்குப் பிந்தி, பாண்டியர் ஆண்ட கூடல் மதுரை மூன்றாம் சங்கம் முழங்கிய காலம் மதுரை புத்தருக்கு முந்தியது. புத்தருக்கு முந்திய பாடலிமோரியர் ஆட்சியிலேயே மதுரையும் பாண்டியரும் வட ஆரியர் புகழும் பெருமை பெற்றிருந்தன. பாண்டியர் பாடிய பழந்தமிழ் நாட்டுக் கடல்கோளில் அழியாமல் சிதறிய பிழைத்த தென்தமிழர் மீண்டும் கூடிக் குடியேறியதால் முதலில் கூடல்’ எனப் பெயர் பெற்ற ஊரே பிறகு கூடல் மதுரை எனச் சிறந்தது. கடல் கோள், கி.பி.2 ஆம்