பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/188

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

செந்தமிழ் பெட்டகம்

அந்தணர் முதலிய பலப்பல குடியினர் அவர்களுடைய பழக்க வழக்கங்கள், விருந்தோம்பும் முறைகள், கடற்கரைப் பட்டினத்தின் இயல்பு, கச்சிநகரின் திலை, திரையனது பெருமை, யாழ்ப்பானரது மரபு முதலியன எல்லாம் இந்தப் பாட்டில் இலக்கியச்சுவை ததும்ப விளக்கம் கூறுகின்றன

பத்தாம் பாட்டாம் மலைபடுபகடாம் என்பது ஒரு கூத்தராற்றுப் படை இதனைப் பாடியவர் இரணிய முட்டத்துப் பெருங்குன்துர்ப் பெருங்கெளசிகனார் இரணிய முட்டம் என்பது மதுரையை அடுத்த ஒருபகுதி இந்தப் பாட்டின் தலைவன் நன்னன் இவன் பல்குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்துவேள் நன்னன்சேய் நன்னன் என இந்த நூலின் உரை முடிவில் காண்கின்றோம் பல்குன்றக் கோட்டம், திருவண்ணாமலை, திருவேங்கடம் முதலியவை அடங்கிய ஒரு பகுதி செங் கண்மா என்பது அதன் தலைநகரம் இஃது இன்று திருவண்ணாமலைக்கருகே செங்கம் என வழங்குகிறது இந்த நாட்டில் சேயாறு பாய்வதனையும், காரியுண்டிக் கடவுள் நவிர மலை (பர்வத மலையென்று இன்று வழங்கும்)யில் இருப்பதனையும் இந்தப் பாடல் பாடுகின்றது

இந்தப் பாட்டு 583 அடிகளைக் கொண்டதொரு பெரிய பாட்டு, பலவகை இசைக் கருவிகளின் பெயர்களையெல்லாம் சொல்லி யாழினைப் புனைந் துரைத்துக் கொண்டு தொடங்குகிறது இந்தப் பாட்டு இருந்த கூத்தனை, வந்த கூத்தன், “ என்னைப் பார்த்ததால் உங்களுக்கு நல்ல காலமே” என்று கூறிப் புரவலனைப்பற்றி என்னென்ன சொல்லப் போகின்றான் என்ப தனை முன்னரே சில தலைப்புக்களில் தொகுத்துச் சுட்டி விளக்கி விடுகின்ற முறையைக் கையாளுகின்றான் போகின்ற வழியைப் புனைந்துரைக்கத் தொடங்கிப் பூக்களை யெல்லாம் இன்பம் சொட்டச் சொட்டப் பாடுகின்றான் அவரைப் பூக்கள் தயிரைத் தெளித்தாற்