பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/219

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

217

அருளின் பெருவிளக்க மாம் பாத்தூண் வாழ்க்கையின் தலையாய சிறப்பு, “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்த வற்றுள் எல்லாம் தலை” கொல்லாமை இவ்வாறு உயிர் ஓம்புதலாக முடிதல் காண்க

நிலையான உணர்ச்சி பெருகுகிறது “நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமையுடைத்து இவ்வுலகம்” எனவே இதில் பற்று ஏன்? உடம்பு மிகையானபோது எதனை விடுவது? “யான் எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்.” எவ்வாறு விடுவது? ஒரு கிளையைப் பற்றியவன் மற்றொரு கிளையைப் பற்றினால், முன் பற்றிய கிளையைத் தானாக விடுவது இயல்பு

எல்லாமாகி நிற்கும் பற்றற்றவனது பற்றினைப் பற்றினால் பிற பற்றுக்கள் தாமே விடும் அப்போது மெய்யுணர்வு பிறக்கும் பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும் மருட்சி தீரும் “எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” இந்த மெய்யுணர்வு பிறந்த பின்னும் பழைய பழக்கம் ஒழியாது; ஆதலின் அந்தப் பழைய பற்றினை விழிப்போடு அறுத்தெறியவேண்டும் “ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும்” இவ்வாறு அன்பு அழியாத இன்பமாக மலர்கிறது

அறத்துப்பாலின் முடிவில் ஊழ் என்ற அதிகாரம் ஒன்று உள்ளது. ஊழ் என்பது முறைமை காரண காரியத் தொடர்பாக அமைந்த உலக இயல்பு இது. ஆதலின், நம் முயற்சியினிடையே இதனை மறந்து நம்மையும் பிறரையும் வெறுத்துத் திரிவதால் பயனில்லை. "ஊழிற் பெருவலியாவுள" ஆதலின் நமக்கு உள்ளது கொண்டே அதற்கேற்ப அன்பு வாழ்க்கையை உருப்படுத்தவேண்டும். சீட்டாடுவோர் அறிவோடே ஆட வேண்டும்; ஆனால்