பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/234

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

செந்தமிழ் பெட்டகம்

திருக்குறளை இருந்து அவர் எடுத்துக் காட்டும் பக்தி சமண மறையின் கோட்பாடாக விளங்குகிறது என்ற அளவில் அவ்வுரைப் பகுதிக்குப் பொருள் கொள்ளுதல் கூடும் ‘அவி சொரிந்து’ எனவரும் குறளின் கருத்து மனுவிலும் வருவதால் சமணப் பாட்டென முடிவு செய்வதற்கில்லை பிற்காலத்தே தாம் கொல்லாது வந்த புலாலைப் பெளத்தர்கள் உண்டு வந்தாலும் புலால் உண்ணாமை பழங்காலப் பெளத்தர்கள் கைக்கொண்டதோர் அறம் என மணிமேகலை கூறும் சாதுவன் கதையால் அறிகிறோம் ஆதலின் 'தினற் பொருட்டால்’ என்ற குறள் பெளத்த மதத்தின் கண்டனம் என்று ஒரு தலையாகக் கொள்வதற்கில்லை

அளறு, இருள் போன்ற நகரங்களின் பெயரும், ‘பரத சக்கரவர்த்தியே சமுதாயத்தை அமைத்தார்’ என்பது போன்ற குறிப்பும், அவசரப்பிணி முதலிய கால பாகுபாட்டின் குறிப்பும், ஓர்ப்பு என்ற கருத்தும் திருக்குறளின் சமணமத அடிப்படையைச் சுட்டும் எனக் கொள்வதற்கு இடம் இருந்தாலும், இவற்றை எல்லோர்க்கும் பொதுவென்ற முறையில் உரையாசிரியர்கள் விளக்குகிறார்கள் என்பதை மறந்துவிட முடியாது திருக்குறளைப் பொதுமறை எனக் கூறுவதே திருக்குறளின் சிறப்பும் வள்ளுவரின் பெருமையும் ஆம்.

இவர் காலத்தைப் பற்றியும் முடிவான கருத்து ஒன்று விளங்குவதாகக் கூறுவதற்கில்லை வள்ளுவர் சங்க காலத்துப் புலவர்களுக்கு முந்தியவர் என்றும் பிந்தியவர் என்றும் இருதிறக் கொள்கைகள் வழங்குகின்றன. “உய்வில்லை செய்ந்நன்றி கொள் மகற்கு” என்பது குறள் “செய்தி கொன்றார்க்கு உய்திஇல்” என்பது புறம் “நாடாது நட்டலிற் கேடில்லை, நட்ட பின் வீடில்லை” என்பது குறள் “பெரியார் நாடி நட்பின் அல்லது நட்டு நாடார்” என்பர் கபிலர் “நீரின்றமையாதுலகு” என்பது குறள் “நீரின்றமையா உலகம்” என்பர் கபிலர் “பெயக் கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு-