பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/249

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

247

முனிவர், சங்க காலத்தெழுந்த இலக்கிய இலக்கணங்களை நன்கு பயின்ற வித்தகர்; வட மொழிப் பயிற்சியும் மிக்கவர்; அதனால், வடமொழியில் வழங்கும் கூடித்ர சூடாமணி, கத்திய சிந்தாமணி, சீவந்தர சம்பு என்னும் நூல்களை நன்கு பயின்று, அவற்றைத் தழுவியே தமிழில் இப் பெருங்காப்பியத்தை இயற்றியவர் இளமைப் பருவத்திலேயே துறவு மேற்கொண்டு, நற்குணங்கள் பலவற்றிற்கும் ஆதாரமாய்த் திகழ்ந்தவர் இவரது காலம் கி பி 9ஆம் நூற்றாண்டென்பது ஆராய்ச்சியாளர் கொண்ட முடிவு

டாக்டர் உ. வே சாமிநாத ஐயரவர்கள், 1887-ல் வெளியிட்ட முதற்பதிப்பில் 3145 கவிகள் காணப்படுகின்றன. சைவ சித்தாந்த சமாஜப் பதிப்பில் 3154 கவிகள் அமைந்துள்ளன. இந்நூல் சம்பந்தமாக வழங்கும் தனிப்பாடலொன்று இதன் செய்யுட்டொகை 3315 எனக் கூறுகின்றது நச்சினார்க்கினியர், “முந்நீர் வலம்புரி” என்று தொடங்கும் செய்யுட்குக் கூறும் உரையில் ‘தேவர் அருளிச் செய்த செய்யுள், இரண்டாயிரத் தெழுநூறே’ என்று கூறுவதைக்கொண்டு, மற்றைச் செய்யுட்கள் கந்தியார் என்னும் புலமைச் செல்வியார் ஒருவரால் இடைச்செருகலா யமைந்த கவிகள் என்று சிலர் கருதுகின்றனர் அச்செய்யுட்கள் இன்னவை என்பது புலப்படவில்லை

ழுலியேன் வேன்சோன் என்னும் பிரெஞ்சுஅறிஞர், 1883ஆம் ஆண்டில் பாரிஸ் கீழ்நாட்டுக் பற்றிய கட்டுரையொன்றில் சீவக சிந்தாமணி 3145 பாட்டுக்களை உடையது என்று கூறுகிறார் இக் கூற்று டாக்டர் ஐயரவர்கள் பதிப்பித்த இந்நூலின் முதற்பதிப்பைக் கண்டு கூறியதேயாம்

‘இலம்பகம்’ என்னும் அதிகாரக் குறியீடு வேறு தமிழ் நூல்களுள் யாண்டும் காணப்படவில்லை வடமொழி நூலான சீவந்தர சம்பு என்னும் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் நூலில் இப்பாகுபாடு