இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
36
தகடூர் யாத்திரை
விளங்கியிருக்கும் என நம்மை நினைக்கத் தூண்டுகின்ற செய்யுள் அது. இது, உக்கிரப் பெருவழுதி கானப் பேரெயில் வேங்கை மார்பனை வென்று, மதுரை நகர்க்கண் கொண்டாடிய வெற்றி விழாவின்போது எனக் கருதப்படுவதனால், ஒளவையார் அதுசமயம் மதுரை நகர்க்கண் சென்றிருந்தனர். ஆதலும் வேண்டும். • , நாஞ்சில் வள்ளுவனையும், தொண்டைமானையும் பாடியுள்ள இவரைத், தமிழகம் முழுமையும் சென்று, வேந்தர் பலரானும் பாராட்டப் பெற்று விளங்கிய சான்றோர் எனக் கருதலாம். - - - வரலாற்றுக் குறிப்புக்கள் பற்றிய செய்திகளை இந்த - அளவில் நிறுத்திக் கொண்டு, இனித் தகடுர் யாத்திரைச் செய்யுட்களாக நிலவுவனவற்றைப் பற்றி அறிவதற்குச் செல்வோமாக - - - - XXXXXX