பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/117

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

111

பயிரிட்டுப் பரப்பினார். இது வித்துறையுடன் கூடியிராத காரணத்தால் மொட்டைக் கோதுமை (Naked wheat) என்று கூறுகிறார்கள்.

இங்கு விளையும் பார்லியில் பலவகை உண்டு. அவைகளில் மிகவும் சிறந்தது 'அக்கி காஞ்சி' என்பதாகும். 'படகர் காஞ்சி' என்பது, படகர்களால் நீண்ட நாட்களாகப் பயிரிடப்பட்டு வந்த நாட்டுப் பார்லி. துரைக்கஞ்சி (Gentlemen's barlie) என்ற ஒன்று உண்டு. இது சல்லிவன் துரையால் இங்குக் கொண்டு வரப்பட்டதால் இப்பெயர் பெற்றது. ஆனால் நாட்டுக் காஞ்சியைவிட இது தரத்தில் குறைந்தது. ஹனீவெல் என்ற ஐரோப்பியர் இங்கிலாந்திலிருந்தும், ஸ்காட்லாந்திலிருந்தும் உயர்ந்த ரகமான பார்லியை வரவழைத்து, அரவங்காட்டிற்கு அருகிலிருந்த படகர்களிடம் கொடுத்துப் பயிரிடுமாறு கூறினார். அவர்கள் சிறிது தயங்கவே, விளையும் தானியத்தை அதிகவிலை கொடுத்து வாங்கிக்கொள்வதாக வாக்குறுதியளித்தார். அவர்களும் கொஞ்ச நாள் பயிரிட்டனர். மற்ற பார்லிகளைவிட இதற்கு அதிகத் தழை உரம் தேவைப்பட்டது. மற்றவர்களைப்போல் நாட்டுப் பார்லியைப் பயிரிடுவதை விட்டுவிட்டுத் தாங்கள் மட்டும் புது மாதிரியான தானியத்தைப் பயிரிடுவதை அவர்கள் விரும்பவில்லை. ஆகையினால் அம்முயற்சி கைவிடப்பட்டது.

உருளைக் கிழங்கு :

இங்கு விளையும் உருளைக் கிழங்கு பெரும் அளவில், பர்மா, இலங்கை முதலிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது, ஆனால் மேலை நாட்டு உருளைக் கிழங்குகளைப் போல் அவ்வளவு உயர்ந்ததல்ல. ஐரோப்பியத் தோட்ட முதலாளிகள் சீமைக் கிழங்குகளின் விதைகளைக் கொண்டுவந்து பயிர்த்தொழில்