பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/148

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

கின்றனர். பாலோல் தான் புனித எருமைகளுக்கும் தோடர் களுக்கும் இடையிலிருந்து பணிபுரிபவனாக. {Intermediary) விளங்குகிறான். அவனுக்குத் துணையாக ஒரு பணியாளன் உண்டு. அவனைக் 'கல்டமொக்' (Kaltmokh) என்று அழைக்கின்றனர்.

தோடரின் கோயில் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முற்பகுதி பாலோலின் இருப்பிடமாகப் பயன்படுகிறது. உட்பகுதி கடவுளின் இருப்பிடம். கோயிலிலுள்ள எருமைப்பண்ணைக்கு 'டி' (Ti) என்று பெயர். இத்தகைய பண்ணை சீகூர் (Sigur) சிகரத்திற்கருகில் உள்ளது. உதகமண்டலத்திலுள்ள ஐரோப்பியர்கள் இதைத் தோடர் கோயில் (Toda Cathedral) என்றே அழைக்கின்றனர். புனித எருமைகளிலிருந்து கிடைக்கும் வருவாய் கோயில் வழிபாட்டிற்குப் பயன்படுத்தப்படுகிறது. கோயிலின் முற்பகுதியில் பாலோல் உறங்குவது வழக்கம். இந்துக் கோயில்களில் கருவறை (மூலத்தானம்) எவ்வளவு புனிதமாகக் கருதப்படுகிறதோ, அது போல இதன் உட்பகுதி தோடர்களால் கருதப்படுகிறது. அதனுள் பாலோலைத் தவிர வேறு யாரும் நுழையக் கூடாது. புனிதப் பண்ணையில் பணிபுரிபவர்கள் கூட உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. புனித எருமைகளின் பாலைக் கறத்தல் முதலிய பணிகளைக்கூடப் பாலோல் தான். நேரடியாகச் செய்வது வழக்கம், கோயிலுக்குள் இருக்கும் போது பாலோல் ஒரே ஒரு லங்கோடுதான் அணிவது வழக்கம். பாலோல்அணியும் போர்வை பழுப்பு அல்லது கருப்பு நிறம் உடையதாக இருக்கும். கோயில் வழிபாட்டிற்கும், புனித எருமைகளின் உபயோகத்திற்கும் ஒரு நீரோடை பயன்படுத்தப்படும். அதன் நீரை வேறு யாரும் பயன் படுத்தக்கூடாது. பாலோல் எதிர்பாராவிதமாக, வேறு ஏதேனும் குடிசையில் உறங்க நேரிட்டால், தரையையும், உறங்கும் மேடையையும் தவிர, அக் குடிசையிலுள்ள வேறு எப்பொருளையும் தொடுவது கிடையாது. பெரிய