பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/180

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

வழி :

உதகமண்டலத்தை இரு வழிகளில் வந்தடையலாம். மைசூரிலிருந்து மலைவழிப் பாதையில் 100 கல் உந்து வண்டியின் மூலம் சென்று உதக மண்டலத்தை அடையலாம். கோவையிலிருந்து மேட்டுப் பாளையம் வழியாகவும் சென்றடையலாம். மைசூரிலிருந்து வரும் வழி கன்னடக் காட்டில் (Kanara forest) புகுந்து வருகிறது. இவ்வழி அழகிய காட்சிகளைக் கொண்டது; உள்ளத்திற்கு இன்பத்தைப் பயப்பது. கோவையிலிருந்து உதக மண்டலம் செல்ல உந்து வண்டிகளும் நிறைய உள்ளன. ஆனால் புகைவண்டியில் ஏறி, மேட்டுப் பாளையம் வழியாகச் சென்றால் நீலகிரியின் மலைவளத்தை நல்ல முறையில் கண்டு இன்புறலாம். புகைவண்டிச் செலவு நம் பொறுமையை அளவுக்கு மீறிச் சோதித்துவிடும். புகை வண்டி மிகவும் மெதுவாகச் செல்லும். மேலும் இடையிலுள்ள புகை வண்டி நிலையங்களில் அடிக்கடி நின்று விடும். மற்ற புகை வண்டிகளுக்கும் நீலகிரி மலைமேல் செல்லும் புகை வண்டிகளுக்கும் ஒரு வேறுபாடு உண்டு. இவ்வண்டிகளில் இயங்கி (engine) முன்னால் பொருத்தப்படுவதில்லை, பின்னிருந்து வண்டியைத் தள்ளுகிறது. இவ்வண்டியிலுள்ள முதல் பெட்டி திறந்த பக்கங்களையுடைய தாக இருக்கும். ஆகையினால் இப்பெட்டியில் இடம் பிடிக்க எல்லாப் பிரயாணிகளும் போட்டியிடுவர். ஏனென்றால் அப்பெட்டியில் உட்கார்ந்திருப்போர் மலைச்சரிவுகளில் உள்ள இயற்கைக் காட்சிகளை நன்கு. பார்த்து மகிழ முடியும்.

வளர்ச்சி :

அரசியல் மனை (Government House) கட்டப்பட்டதும், சுதேச மன்னர்களும் செல்வந்தர்களும் உதகமண்டலத்தில் பெரிய பெரிய மாளிகைகளை எழுப்பத் தொடங்கினர். இப்போது ஊட்டியில் ஏறக்