பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/247

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

241

மாகவோ, வண்டிப்பாதை மூலமாகவோ இணைக்க வேண்டுமென்று வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார். வென்லாக் அவர்கள் இங்கு வந்தபோது, மழைக்கால இரவில் இரட்டை வண்டியில் பயணம் செய்தும், குதிரைப்பாதையில் நடந்தும், புரவியூர்ந்தும் மிகவும் தொல்லைகளுக்குள்ளாகிக் கோடைக் கானலையடைந்தார். கோடைக்கானலுக்கு ஒரு நல்ல பாதை அவசியம் என்பதை அவரும் உணர்ந்திருக்க வேண்டும்.

சர் ஆர்தர் ஹாவ்லாக் என்பவர் 1899-ஆம் ஆண்டு வானாய்வுக்கூடத்தைப் பார்வையிட்டார். சென்னைக் கிருத்தவக் கல்லூரியில் பேராசிரியராக இருந்தவரும், சென்னை அரசியலாரின் வான ஆராய்ச்சித்துறைத் தலைவராக இருந்தவருமான திருவாளர் மிச்சி ஸ்மித் என்பவர் கோடைக்கானல் வானாய்வுக் கூடத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு சிறிதுகாலம் பணி செய்தார். அவர் அலுவலிலிருந்து ஓய்வு பெற்றதும், திருவாளர் ஜே. எவர்செட் என்பவர் பொறுப்பேற்றார். எவர்செட் அவர்களின் மனைவியாரும் வான ஆராய்ச்சிக் கலையில் நல்ல புலமை பெற்றவர், அவ்வம்மையார் 'தென்மண்டல விண்மீன்களின் வழி காட்டி' (Guide to the Southern Stars) என்ற ஒரு நூலை எழுதிப் பதிப்பித்தார்.

கி. பி. 1910-ஆம் ஆண்டு திருவாளர் கேனான் மீச்சி என்பாரும் அவர் மனைவியாரும், திருநெல்வேலிக் குடியேற்றத்திலிருந்து தங்கள் இல்லத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, வானத்தில் ஒரு பெரிய வால்மீனைக் (Comet) கண்டார்கள். ஆங்கிலக் கழகத் (English Club) தினருகே நின்று அதைப் பற்றி, வான ஆராய்ச்சி வல்லுநரான மிச்சி ஸ்மித்தைக் கேட்டார்கள். அதைக் கண்ட மிச்சி ஸ்மித், அது ஒரு

கு.வ.-16