பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/274

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

268

வின் சார்பில் டாக்டர் ஸ்குடர், ரெவரண்டு ஸ்குடர், ரெவரண்டு ஜோன்ஸ், ரெவரண்டு பெர்கின்ஸ் ஆகிய நால்வரும் விளையாடினர். ஆங்கிலப் பேரரசு வென்றது. இதே குழுவினர் திருவாளர்கள் மேன், சேண்ட்லர் என்ற இருவரையும் சேர்த்துக்கொண்டு பூப்பந்தாட்டப் போட்டி ஒன்றும் நடத்தினர். அதில் அமெரிக்கா வென்றது. இளவரசர், துரைராஜா ஆகிய இருவரின் ஒத்துழைப்பால் கோடைக்கானலின் சமூக வாழ்க்கை மிகவும் சிறப்படைந்தது என்று கூறலாம். துரை ராஜா தம் இறுதிக் காலம் வரையிலும் கோடைக்கானலிலுள்ள 'நட்ஷெல்' மாளிகையிலேயே வாழ்ந்து வந்தார். கோடைக்கானல் கழகம், பாதிரிமார் கழகம், குழிப்பந்தாட்டக் கழகம் ஆகியவற்றில் இவர் பெரும் பங்கு எடுத்துக்கொண்டு பணியாற்றினார். இளவரசரும் இவரும் அடிக்கடி புலிவேட்டை ஆடுவது உண்டு.