பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

சேலம், ஆத்தூர்க் கோட்டங்களில் உள்ள விளை நிலங்களுக்குச் சேர்வராயன் மலைகளில் உள்ள தழைகள் உரமாகப் பயன்படுகின்றன. ஒரு ஏகர் நஞ்சை நிலத்திற்கு இரண்டு அல்லது மூன்று டன் தழைகள் உரமாகப் பயன்படுகின்றன. அரசியலார் முதலில் குத்தகைக்காரர்களுக்குக் குறிப்பிட்ட இடத்தில் தழை உரம் சேகரிக்க அனுமதியளித்தனர். ஆனால் பிறகு அரசியலாரே, தனிப்பட்ட அமைப்புகளை ஏற்படுத்தித் தழை உரங்களைச் சேகரம் செய்தனர்.

கனிப் பொருள்கள்

மாக்னசைட் :

சேர்வராயன் மலையடிவாரத்திலும், அதற்கு ஐந்து கல் தொலைவிலுள்ள சுண்ணாம்புக் கரட் (Chalk Hills) டிலும் கிடைக்கும் வெள்ளைக்கல் (சுண்ணாம்புக்கல்) (Magnesite) மிகவும் உயர்ந்த ரகத்தைச் சேர்ந்தது. இவற்றைத் தோண்டி எடுத்துத் தூய்மை செய்யப்பெரும் பெரும் சூளைகள் நிறுவப்பட்டுள்ளன. அவைகள் சுண்ணாம்புக் கரட்டிலும், சேர்வராயன் மலையடிவாரத்திலும் உள்ளன. இத் தொழிலகங்களில் ஒன்று. ஆங்கிலேயருக்கும் மற்றாென்று டால்மியாவுக்கும் உரிமை பெற்றவை. ஆனால் ஆங்கிலேயர் ஓர் இந்திய முதலாளிக்கே தங்களுடையதை விற்றுவிட்டனர். இவைகளேயன்றி வேறு இரண்டு தொழிலகங்களும் உள்ளன. மாக்னசைட் பெருத்த அளவில், தோண்டத் தோண்டக் குறையாத கனிப்பொருள். உலகில் வேறு இடங்களில் கிடைக்கும் சுண்ணாம்புக் கற்களைவிடச் சேலத்தில் கிடைக்கும் கற்களே மிகவும் சிறந்தவை என்றும், தூய்மையானவை என்றும் கூறுகின்றனர்.

மிதமான சுண்ணாம்புக் கலப்புள்ள கற்கள், பலவித இன்றியமையாத பணிகளுக்குப் பயன்படுகின்றன. கட்டிடத் தொழிலுக்கு மிகவும் தேவையான காரை