பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

56 தமிழகக் குறுநில வேந்தர் 'மெய்ம்மலி பெரும் பூட் செம்மற் கோசர்" (அகம்.15) 'கோசர் துளுநாட்டன்ன எனவும் வறுங்கை வம்பலர்த் தாங்கும் பண்பின்” (அகம்.15) எனவும் வருவனவற்றான் நன்கறிக. இவர் வீரத்திற்கேற்ற மாறாப் பெரு வாய்மையும் அவை யிரண்டிற்கு மேற்ப உற்றுழியுதவும் பெருவன்மை யும் உடைய ரென்றும் இங்குக் காட்டிய மேற்கோள்களால் நன்கறியலாகும். இவற்றுடன், சென்று வழிப்படுந் திரிபில் சூழ்ச்சியுடையரென்று சான்றோர் புகழ்தல் நினைந்து கொள்க. வறுங்கை வம்பலரையுங் கொன்று மகிழும் பாலை நில மாக்கள் போலாது அவரைத் தாங்கும் பன் பினரென்று இவர் தனியே புலவராற் சிறப்பித்துப் பாடப் படுதலால் இவர் கொடை மேம்பாடு நன்குணரப்படும். 'நெறிசெல் வம் பலர்க்கொன்ற தெவ்வர்' (s. 113) ST GOT MILD 'அம்பு தொடை யமைதி காண்மார் வம்பலர் கலனில ராயினுங் கொன்று புள்ளூட்டும் கல்லா விளையர் கலித்த கவலை" (அகம்.375) 'வம்பலர்ச் செகுத்த அஞ்சுவரு கவலை என்றும் (அகம்.161) எனவும் வருமிடங்களிற் பாலை நில மாக்கள் இயல்பு காண்க. மேல் எடுத்துக் காட்டிய கோசர் மேற்கோள்களால் க் கோசர் நாகரீகத்திற் சிறந்த சத்திய வீரரென்பது நன்கு புலனாகும். இச் சத்திய வீரர் கோசர் எனப் பெயர் சிறந்ததன் காரணம் பலபடியாக ஆலோசிக்கப்படுவது. கோசம் என்பது பெருங்கதைத் தலைவனான வத்தவர் கோன் உதயணன் இருந்தரசாண்ட கோசாம்பிக்கு வழங் கும் பெயராகும். இது கங்கையும் யமுனையுங் கலக்குமிடத்