பக்கம்:தமிழச்சியின் கத்தி, 1992.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழச்சியின் சுத்தி இப்பக்கம் நன்செய்நிலம் என்ன விலை? என்றான். அப்பக்கம் எப்படியோ அப்படித்தான்-இப்பக்கம் என்று நடந்தாள். இவனும் உடன்சென்றே இன்றுகறி என்ன எனக்கேட்டான்-ஒன்றுமே பேசா திருந்தாள். பிறகுதிண் ணைக்குவந்தான். கூசாது பின்னும் குறுக்கிட்டு-"நீ சாது வேலைஎலாம் செய்கின்றாய் வேறு துணையில்லை காலையி லிருந்துநான் காணுகின்றேன்-பாலைக் கறப்பாயா எங்கே கறபார்ப்போம்" என்றான். அறப்பேசா மல்போய் அறைக்குள்-முறத்தில் அரிசி எடுத்தாள். அவனும் அரிசி பெரிசிதான் என்றுரைத்தான். பேசாள் - ஒருசிறிய குச்சிகொடு பற்குத்த என்பான். கொடுத்திட்டால் மச்சு வீடாய்இதையேன் மாற்றவில்லை?- சீச்சி இதுபோது மாஎன்பான். சுப்பம்மா இந்தப் புதுநோயை எண்ணிப் புழுங்கிப்-பதறாமல் திம்மனுக் கஞ்சித் திகைத்தாள். அந் நேரத்தில் திம்மனும் வந்தான் சிடுசிடுத்தே- இம்மட்டும் வேலையொன்றும் பாராமல் வீணாக நீவீட்டு மூலையிலே தூங்கினாய் முண்டமே-பாலைவற்றக் காய்ச்' சென்றான். சென்றாள் கணவனது கட்டளைக்குக் கீச்சென்று பேசாக் கிளி.

25

25