பக்கம்:தமிழர் மதம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இடை நிலை யியல் திருமூலர் தலை சிறந்த ஓகியரும் மெய்ப் பொருளோ தியரும் (தத்துவ ஞானியரும்) ஆதலால், அவர் எங்கனம் தவறாகக் கூறியிருக்க முடியும்? எனச் சிலர் வின வலாம். இதற்கு விடை, அவர் காலத்திற்கு முன்பே ஆரியச் சொற்களும் கருத் துக்களும் சிவனியத்தில் வேரூன்றி விட்டதனாலும், அவர் காலத் திலும் மொழி யாராய்ச்சி யின்மையாலும், அவர் போலும் பெரி யார்க்கும் ஆரியக் கலப்பை அறியவும் அதை நீக்கவும் இயலாது போயிற் றென்பதே. இறைவன் திருவருள் பெற்றவ ரெல்லாம் எல்லா மறிந்தவர் என்று கருதுவது, அறியாமையின் பாற்பட்டதே. இறைவன் ஏற்படுத்தியவாறு, ஒவ் வொருவரும் ஒவ் வோர் அறிவுத் துறை விலேயே வல்லுநராதல் கூடும். கணித அறிஞர் வரலாற்றியா தது போல், மெய்ப் பொருளியலாரும் அறிவியல் அறியார். மொழி நூல் ஓர் அறிவியல். . அது தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே குமரிநாட்டில் தோன்றியதேனும், ஆரியரால் மறைக் கப்பட்டு விட்டது. திருமூலர் போல்வார் திங்கன யடையும் வான் கலத்தைத் தம் மன வலியால் தடுக்க முடியும். ஆயின், அதன் அமைப்பை விளக்க முடியாது. மன வலி வேறு; நூலறிவு வேறு. மந்திரம் என்பது மன வலிமையே யன்றி எழுத் தொலிப் பன்று . முன்னுதல் - கருதுதல். முன்-மன், மன் + திரம்(திறம்) = மன்றிரம்-மந்திரம். மன்-மனம். "நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப. (தொல். கசகச). (எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெரின். (குறள், சுசுசு). வீடு பேறும் நல் வாழ்வும் இறைவ னருளாற் பெறுவன வாத லின், அவன் திருப் பெயரை முழு நம்பிக்கை யுடன் ஓதி வழி படல் வேண்டும். இறைவனுக்கு எல்லா மொழியும் ஒன்றே. ஆயினும் தமிழ், உலக முதன் மொழியும், சிவ (இறைவன்) வழிபாடு தோன்றிய மொழியும், ஆரியத்திற்கு மூல மொழியும், இளைத்தவரும் பேசக் கூடிய மெல்லொலி மொழியும், முழுத் தூய முனிவர் வளர்த்த மொழியும், முதல் மறை இயன்ற மொழியும் ஆதலால், சிவ போற்றி என்னும் செந்தமிழ்த் திருவைந் தெழுத்தே சிவனுக் கேற்ற சிறந்த மந்திரமாம். '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/113&oldid=1429693" இலிருந்து மீள்விக்கப்பட்டது