பக்கம்:தமிழர் மதம்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இடை நிலை யியல் கான் போன்ற அறிவியற் செய்திகள, ஒருசார் தமிழர்க்கு மட்டும் ஏற்குமாறு திரித்துக் கூறுவதால், கருதிய பயன் கைகூடி விடாது. ஓர் உலகப் பொதுவுண்மையை உலக அறிஞர் அனை வரும் ஒப்புக் கொள்ள வேண்டும். பொய்யொடு கலந்த மெய்யும் பொய்யாகவே போம். (கசு) இறையுயி ருறவுக் கொள்கை இறைவனுக்கும் ஆதனுக்கும் இடைப்பட்ட உற வியல்பு பற்றி, ஒருமை (அத்துவிதம்) என்னும் ஒற்றுமை யு றழும் (அபேத வாதமும்), இருமை (துவைதம்) என்னும் வேற்றுமை யுறழும் (பேத வாதமும்), சிறப்பொருமை (விசிஷ்டாத்து விதம்) என்னும் ஒன்றிய வேற்றுமை யுறழும் (பேதா பேதவா தமும்) தோன்றி யுள்ளன. இம் மூன்றற்கும் பொதுவான தூ வொரு மையே (சுத்தாத்து விதமே) சிவனியக் கொள்கை யென, இக் காலக் கொண் முடிபர் கூறுவர். தூ வொருமையை வெள் ளொருமை எனினும் ஓக்கும். இறைவனொடு ஆதன் இரண்டறக் கலந்த தெனின், பின் ன தன் இன்ப நுகர்ச்சிக் கிடமில்லை. இரண்டும் வெவ் வேறெனின் , இறைவனின் எங்கும் நிறைந்த தன்மைக்கு இழுக் காகும். ஆகவே, சிறப்பொருமை என்பதே உத்திக்குப் பொருத் துவ தாகும். ஒருமையும் இருமையும் ஆரியராற் புகுத்தப்பட்ட கொள்கை கள், சிறப் பொருமை இராமானுசாச்சாரியரால் திருமாலியத்திற் புகுத்தப்பட்ட தேனும், அதுவே பழந்தமிழ்க் கொள்கையாகும். ஆரியக் கொள்கைகள் தோன்றும் வரை, அது கூறப்படத் தேவை யின்றி மறைவா யிருந்தது. முக் கொள்கையையுத் தழு வியது தூ வொருமை யென்பது, முரண்பட்டதும் கோமுட்டி. சான்றுரை போன்றதுமாகும். இறைவனின் நிழல் வடிவே எல்லாப் பொருள் களு மென் றும், காண்பன வெல்லாம் கனவீற் கண்டவை போலப் பொய் யென்றும், இம் மெய்யுணர்வைப் பெற்ற வளவிற் பிறப்பின்றி வீடுபெறலா மென்றும், கூறுவ தெல்லாம் பிதற்றல்களும் பித் துரைகளுமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/123&oldid=1429703" இலிருந்து மீள்விக்கப்பட்டது