பக்கம்:தமிழர் மதம்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மூடிபுரை யியல் ககக கனவு காணுது உறங்கும் நேரம் தவிர, மற்றெல்லா நோத் திலும் - இருப்பினும், நடப்பிலும், வேலை செய்யினும், உரையா டினும் உண்ணினும் - இறைவனே நினைக்கவும் வழுத்தவும் வேண்டவும் இயலுமாதலின் , மனம் உள்ளவரை மதத்தை ஒருவராலும் அழிக்க முடியா தென அறிக. க. நம்பா மதமும் ஒரு மதமே. கடவுளும் மறுமையும் இல்லை யெனும் கொள்கையும் ஒரு மத மாதலால், மதத்தை ஒழிக்க வேண்டு மென்பது, செருக்கை படக்க வேண்டும் என்றே பொருள் படுவதாகும். உள் மதம் (ஆஸ்திகம்), இல் மதம் (நாஸ்திகம்) என்னும் வழக்கையும் நோக்குக. | மக்களாட்சியும் குடியரசும் நடைபெறும் இக் காலத்தில், ஒவ் வொருவர்க்கும் தத் தம் மதத்தைப் பரப்ப முழு வுரிமை யுண்டு. ஆதலால், தஞ்சைப் பெரியார் படிமை யடித் தளத்தில், கடவுளில்லை கடவுளில்லை கடவுளென்ப தில்லையே என்று. பொறித் திருப்பது பற்றியும், அப் படிமையைத் திறந்து வைத்த முதலமைச்சரைக் குறித்தும், ஓர் ஆரியக் கூட்டம் உவல கூறு வது நச்சுத் தன்மையான குறும்புத் தனமே. சேலம் மூட நம்பிக்கை யொழிப்பு மாநாட்டிலும், பெரியார் ஏவலால் வரைந்து காட்டப் பட்ட ஓவியங்கள், தொன்மங்களிற் சொல்லப்பட்ட செய்திகளே. அவ் வோவியங்களைப் பற்றிக் குமரி முதல் பனிமலை வரை வீண் பேராரவாரம் செய்யப் பட்டது. அவற்றிற்கு மூலமான செய்திகளை நீக்கின், அவ் வோவியங்கள் தாமாக நீங்கி விடும். இற்றை அறிவியற் போக்கு இறைவ னின்றி எல்லாம் இயற்கையாகத் தோன்றிய தென்பதையே, அறிவியற் பொது அடிப்படையாக இக் காலத்துப் புதுப் புனை வாராய்ச்சியாளர் பலர் கொண்டுள்ளனர். தார்வின் ( Darwin) கொள்பும் (theory) இதற்குத் துணையெனக் கருதுகின்றனர். ஆயின் தார்வினே தம் இறுதிக் காலத்தில் தம் இளமைக் காலக் கொள்பு பற்றி வருந்தின தாகத் தெரிகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/207&oldid=1429366" இலிருந்து மீள்விக்கப்பட்டது