பக்கம்:தமிழர் மதம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம் "எட்டுத் திசையும் பதினாறு கோணமு மெங்குமொன்றாய் முட்டித் ததும்பி முளைத்தோங்கு சோதியை மூடரெல்லாம் கட்டிச் சுருட்டித்தம் கக்கத்தில் வைப்பர் கருத்தில்வையார் பட்டப் பகலை யிரவென்று கூறிடும் பாதகரே." (பட்டினத்.பொது.௩0). "உளியிட்ட கல்லையும் ஒப்பிட்ட சாந்தையும் ஊத்தையறப் புளியிட்ட செம்பையும் போற்றுகி லேனுயர் பொன்னெனவே ஒளியிட்ட நாளிரண் டுள்ளே யிருத்துவ துண்மையென்று வெளியிட் டடைத்துவைத் தேனினி மேலொன்றும் வேண்டிலனே,33 ( கக ). "முப்பாழும் பாழாய் முதற்பாழுஞ் சூனியமாய் அப்பாழும் பாழா யன்புசெய்வ தெக்காலம். (பத்திர. ககட). ‘‘வெட்ட வெளிக்குள்ளே விளங்குஞ் சதாசிவத்தைக் கிட்ட வரத்தேடிக் கிருபைசெய்வ தெக்காலம். "நட்ட கல்லைத் தெய்வ மென்று நாலு புட்பஞ் சாத்தியே சுற்றி வந்து முணமு ணென்று சொல்லு மந்திரம் ஏதடா நட்ட கல்லும் பேசு மோநம் நாத னுள்ளி ருக்கையில் சுட்ட சட்டி சட்டு வம்க றிச்சு வைய றியுமோ, (6 ககூகூ). (சிவ வாக். ருக௮). கொண் முடிபு சிவ மதத்திற்குக் கூறிய கொண் முடிபே கடவுட் சமயத்திற் கும். தலைவன் தளையன் தனை என்னும் முப் பொருளை, கடவுள் கட்டுணி கட்டு என்று சொன் மாற்றியுங் கூறலாம். இல்லற வாயிலாகவும் இறைவன் திருவடி யடையலா மாத லால், நல் வினையாற்கேடில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/72&oldid=1428934" இலிருந்து மீள்விக்கப்பட்டது