பக்கம்:தமிழின எழுச்சி.pdf/109

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

108 - தமிழின எழுச்சி

வரலாற்றியல் கேடுகள் பற்பலவாகும். அவற்றையெல்லாம் இங்கு வாழ்ந்திருந்த இனநலத்தலைவர்களும் இக்கால் உள்ள அறிஞர்களும் பல முறையில் பல வகையாக விளக்கி வந்திருக்கின்றார்கள்; வருகின் றார்கள். அவர்களின் அறிவுரைக்கும் நல்லுரைக்கும் தக்கபடி மதிப்பளித்துச் செவிசாய்த்துத் தம் காலத்திற்குள், தாம் செய்யவிருப்பன இவை இவை என்று திட்டவட்டமாக வரையறுத்துக் கொண்டு செயல்படுதல் வேண்டும். அடுத்த முறையும் தாம் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என்பதையே தம் தலையாய குறிக்கோளாகக் கொள்ளாமல், இனி, எவர் வந்தாலும் இதுபோல் செய்யவியலாது என்னும் வகையில், மெய்ப்புகழும் பெருமையும் பெறவேண்டிய பெரு நோக்கத்துடன், முதலமைச்சர் அவர்கள் இயங்குதல் வேண்டும்.

தமிழினப் பகைவர்களும் வடபுலக் கொண்டான்மார்களும் தேசியம் என்னும் பெயரால் கடந்த ஆண்டில் நடத்திய கொடுமையும் கூத்தாட்டமும் பலவாகும். தமிழ் மொழிக்கும் தமிழினத்திற்கும் நம் முந்தையத் தலைவர்களாலும் முன்னைய ஆட்சியாளர்களாலும் விழிப்பாகச் செய்யப்பெற்ற அனைத்து நலன்களையும் கிண்டிக்கிளறி அவற்றின் ஆணிவேர் சல்லிவேர்களையெல்லாம் கண்டு கனன்று அறுத்துச் சிதைத்தெறிந்த செயல்கள் பலவாகும். அவர்களின் அடங்காச் சினத்தால் தலைக்குப்புறக் கவிழுக்கப்பெற்ற தமிழர் நலன்களும் தமிழ் வளன்களும் ஏராளம்! அவற்றையெல்லாம் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. ம.கோ.இரா. அவர்கள் கவனமாகப் படித்தறிந்து, கீழ்ப்படுத்தப் பெற்ற நலன்களுக்கு மீண்டும் நன்னீர் ஊற்றிக் காத்து வரல் வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றோம்.

இனி, எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள கலைஞரும் முதலமைச்சர் ம.கோ. இரா.வின் மேல் தனிப்பட்ட முறையில் வெறுப்போ, பகையோ கொள்ளாமல், 'கன்றினால் கொள்ப கறந்து' என்பது போல், அவர் வழியாக நம் நாட்டிற்கும் இனத்திற்கும் மொழிக்கும் முழுநலன் ஏற்படும் வகையில், செய்து கொள்ள வேண்டிய அனைத்துச் செயல்களுக்கும் தோன்றாத் துணையாக நின்றுதவ வேண்டிக் கொள்கின்றோம். கட்சி வேறுபாட்டையோ, கருத்து வேறுபாட்டையோ பெரிதாகக் கருதாமல், 'அவர் செய்த ஒன்று நன்றுள்ளக் கெடும்' என்னும் குறள் மொழிக்கு ஒப்ப, தமிழ் நலன் கருதி அவர் செய்யும் ஒவ்வொரு செயலையும் மனமுவந்து சிறு வினையையும் அன்பொடும், அக்கறையொடும் சுட்டிக்காட்டி, இனி விளங்க விருக்கும் தமிழின வரலாற்றுக்கே வழிகாட்டியாக அமைந்தொழுக வேண்டும் என்று பல்லாற்றானும் பரிந்து வேண்டிக் கேட்டுக்