பக்கம்:தமிழின எழுச்சி.pdf/116

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 115


2. ஆரியத்திற்கும் சமசுகிருதத்திற்கும் அளவிறந்த வரலாற்று மதிப்பையும், பழம் பெருமையையும் உயர்ச்சியையும் தருவது.
3. புராண இதிகாசங்களை உண்மை என்று உலகுக்கு உணர்த்துவது.

- இம்மூன்று உள்நோக்கங்களையும் உறுதிப்படுத்திக் கொண்டு, நடுவணரசின் சில பார்ப்பனீயப் பின்னணியுடன், சில தென்னகப் பார்ப்பனர்கள், இளித்தவாய்த் தமிழர்கள் சிலரைப் பயன்படுத்திக் கொண்டு, இக்கருத்தரங்கைக் கூட்டி, அதற்கு வரலாற்று வலிவையூட்டி, அரசுக்குப் பரிந்துரைத்துள்ளனர். முந்தைய ஆட்சியில் இந்திராகாந்தி புதைத்த வரலாற்றுப் பெட்டகம் போன்ற ஒரு புது வரலாற்றுப் புனைந்துரை உருவாக்க முயற்சி இது.

முதற்கண் இக்கருத்தரங்கு ஓர் அறிவியல் கருத்தரங்கோ , வானியல் கருத்தரங்கோ ஆகாது என்பதை இதில் படிக்கப் பெற்ற கட்டுரைகளைப் பார்த்தால் எளிதில் விளங்கும். இதில் தொடர்பு கொண்டவர்கள் ஓரிருவர் தவிர அனைவரும் பத்தரை மாற்றுக் குறையாத பச்சை ஆரியப் பார்ப்பனர்கள். அவர்கள் முற்றும் அறிவியல் தொடர்புள்ள அறிஞர்களும் அல்லர். இவர்களைப் போல் ஆயிரக்கணக்கான * (எம்.ஏ; பி.எல்) படித்த வழக்கறிஞர்கள், (பி.ஈ.) படித்த பொறியாளர்கள், பழம்பொருள் ஆராய்ச்சியாளர்கள், (பி.ஏ; எல்.டி.) படித்த ஆசிரியர்கள். (பி.எசி.) படித்த அறிவியலாளர்கள், கணியம் தெரிந்த சில கணியர்கள் ஆகியோரைக் கூட்டி இவர்கள் தெரிவித்த கருத்துகள் அனைத்தும் வீணான சொத்தை வெற்றுரைகள் என்று முறியடித்துக் கூறுவதற்கு நம்மவர்களால் முடியும். ஆனால், இவற்றைச் செய்வதற்கு நமக்குச் சில மகாலிங்கத் தமிழர்கள் (!) முன்வர மாட்டார்கள். ஏனெனில் அப்படிப் போன்றவர்களின் தொழிலியல் ஊழல்களை இது போலும் முயற்சிகளால்தாம் திரைபோட்டு மறைத்துக் கொள்ள முடியும். இனி, பண வலிவையும் தேசியப் புரட்டுகளையும் அடிப்படையாகக் கொண்டு ஏற்கனவே உள்ள வரலாற்று முடிபுகளையும் கருத்துகளையும் எளிதாக மாற்றியமைத்து விட முடியும் என்பதற்கு இக்கருத்தரங்கே ஏற்ற சான்றாக அமைகிறது.

இக்கருத்தரங்கில் படிக்கப் பெற்ற கட்டுரைகளில் உள்ள கருத்துகள் அனைத்தும் தமிழ்மொழிக்கும் தமிழர்களுக்கும் ஒரு வகையில் ஏற்றம் காட்டுவனபோல் தோன்றினாலும், அவை இறுதியில் ஆரியத்துக்கே முற்றும் ஊட்டம் அளிக்கின்றன என்பதைச்சற்று மேலோட்டமாகப் பார்ப்பவர்களும் நன்கு உணர்ந்து கொள்ளமுடியும். இக்கருத்துகள் தொடர்பான கட்டுரைகளை எழுதிய பார்ப்பனர்களில் க.சிரிநிவாச இராகவன், G.S. சம்பத்து அய்யங்கார், V.G. இராமச்சந்திரன், G.S. சேசகிரி