பக்கம்:தமிழின எழுச்சி.pdf/18

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தமிழர் செய்யவேண்டிய
தலையாய கடமைகள்!


  1. எக்காலத்தும் எவ்விடத்தும் எவர் முன்னும் தம்மைத் தமிழர் என்றே குறித்தலும் கூறுதலும் வேண்டும். தம் பெயரினும், பிறர் பெயரைத் தாம் குறிக்க நேரினும் குலப் பெயர்களை விடுத்தே கூறுதல் வேண்டும். குல, சமயப் பாகுபாடுகளே இற்றைத் தமிழர் கீழ்நிலையுற்றமைக்கு முழுக் காரணமென்று திண்ணமாய் உணர்தலும் உணர்த்தலும் வேண்டும்.
  2. தமிழல்லாத தம் பெயர்களை உடனே தூய தனித் தமிழ்ப் பெயர்களாக மாற்றிக் கொள்ளுதல் வேண்டும். தம் மக்கட்கும் மனைகட்கும் கழகங்கட்கும் பெயர் சூட்டுங்காலும் தனித் தமிழ்ப் பெயர்களையே சூட்டுதல் வேண்டும்.
  3. மொழியுணர்வு தமிழர்பால் குறைந்து போனமையே பிற மொழியாளர்தம் வெறியுணர்வுக்குக் காரணமாதலின் மொழியே நம்மை ஒருமைப்படுத்தும் வழியென்று கண்டு கடைப்பிடிக்க வேண்டும்.
  4. கட்டுரை, பாட்டு, கதை முதலியன எழுதும் எழுத்தாளர்கள் எக்காரணம் பற்றியேனும் பிற மொழிச் சொற்களைக் கலவாமல் தனித்தமிழிலேயே எழுத முற்படுதல் வேண்டும். நல்ல தமிழாக்கச் சொற்களை அறியாவிடத்துத் தக்கார்வழி அவற்றை உணர்ந்து கைக்கொள்ளுதல் வேண்டும் அவ்வாறின்றி நாகரிகம் என்ற-