பக்கம்:தமிழின எழுச்சி.pdf/195

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

194 • தமிழின எழுச்சி

திருவள்ளுவப் பேராசான் கண்டு, உளம் நொந்து, உட்பகையின் சீர்கேடுகளை, அதன் இனத் தாக்கங்களை இவ்வதிகாரக் கருத்துகளாக இந்நூல்வழி நம்முன் புலப்படுத்துகிறார்.

இவ்வதிகாரத்தை நாம் முழுமையாகப் பார்த்தல் வேண்டும்; படித்தல் வேண்டும்; உணர்தலும் வேண்டும். இவ்வகையில் நாம் உணர்ந்த அனைத்தையும் இங்கு எடுத்துக் கூற இடமில்லாமற் போயினும், அதன் ஓரண்டு இன்றியமையாத கருத்துகளை மட்டும், இக்கால் இனநலத் தேவை கருதி, இங்குக் கூறுவோம்.

உட்பகை சேர்ந்த ஒரு குடி எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கும் என்பதைப் பேராசான் நமக்குப் புலப்படுத்துகிறார். அந்தக் குடி வேறு எந்தக் குடியுமன்று; நம் தமிழ்க் குடிதான். அதுவும் திருவள்ளுவர் காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த குடிதான்! அதில் ஒற்றுமையில்லையாம். அவ்வாறு ஒற்றுமையில்லாமல் உட்பகை செய்து கொண்டிருந்த தாம். எனவே உள்ளே பகைகொண்டு வெளிக்கு மட்டும் ஒற்றுமைபோல் தோற்றம் காட்டிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்ததாம். எப்படி?

'செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி. - (887)

“மண் குடுவைக்கும் அதன் மூடிக்கும் உள்ள ஒற்றுமை போல், அஃதாவது குடுவையும் மூடியும் ஒன்றோடொன்று இணைந்திருப்பதாகத் தோன்றினும், உண்மையில் அவை இணையாமல் பிரிந்திருப்பதைப் போல், உட்பகை கொண்ட குடிமக்கள் ஒற்றுமையாக இருப்பதில்லை ” என்கிறார் நம் அருமைப் பேராசான்.

இந்த உவமையைக் காட்டி நம் தமிழின ஒற்றுமையைச் சாடுகிறார் அவ்வறிவுலக ஆசான்! நம் தமிழின மக்கள் இவ்வாறிருப்பது ஒருவரையொருவர் உட்பகைத்துக் கொண்டு, வெளியே தமிழினத்தவர் என்று கூறிக் கொள்ளும் போலித் தன்மையை மிகுவாகக் கடிகிறார் அவ்வறநெறிச் சான்றோர். இனி, அவர் கூறும் அடுத்த கருத்தையும் பாருங்கள்.

அஃதாவது, அவ்வாறு ஒற்றுமையில்லாத இவ்வினம் எவ்வாறு அழிந்து போகும் என்பதை இன்னோர் உவமையில் விளக்கும் அவரின் நெஞ்சப்பான்மையை, உள்ளத் துணுக்கை, உணர்வுத் துடிப்பை, அறிவுக் கவலையை - எண்ணிப் பாருங்கள். அப்பொழுது அவர் மார்க்சைவிட உயர்வாகத் தோன்றுவார்; எங்கெல்சைவிட ஏற்றமாகத்