பக்கம்:தமிழின எழுச்சி.pdf/34

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வைத்தெண்ணப்பட்டு வருவதோடு, பெரும்பாலான முத்துறை மருத்துவர்களால் தமிழும், வடமொழியும், ஆங்கிலமும் கலந்து பேசப்பெறும் இக்கால தமிழ்போலவே, மும் மருத்துவமும் ஏறத்தாழக் கலப்புற்றதொரு காலமுறைப் பண்டுவம் செய்யப்பெற்று வருவதால், தூய தமிழ் மருத்துவமான நம் சித்த மருத்துவத்தின் பெருமை, கலப்புத் தமிழுட்பட்ட தனித் தமிழின் பெருமை போலவே விளக்கி அறியப்பெறாத தொன்றாய்க் கிடக்கின்றது. பிறமொழிக் கலப்பினின்று மீட்கப்பெறும் தமிழ்போல பிற மருத்துவமுறைக் கலப்பினின்றும் நம் பண்டைத் தமிழ் மருத்துவம் மீட்கப்பெற்றுத் தனிநடை பயிலுமாயின், இவ்வுலகத்து வேறெங்கணும் காணவியலாததோர் அரிய மருத்துவக் களஞ்சியமாம் சித்த மருத்துவத்தின் உண்மை ஒளியினை யாவரும் காணலாம்.

உலகப் பழமையும் தாய்மையும் வாய்ந்த நம் தமிழ்மொழி காலத்தானும், மக்களானும், இடத்தானும் வேறுபட்டுக் கொடுந்தமிழாகவும், பின் திசைமொழிகளாகவும், நடுத்திரவிட மொழிகளாகவும், பிற திரவிடமொழிகளாகவும், ஆரியமாகவும், பின் மேலை ஆரிய மொழிகளாகவும், பின் நூற்றுக்கணக்கான வேற்று மொழிகளாவுந் திரிந்தது போலவே, காலத்தானும் கருத்தானும் உலக முதல் மருத்துவமாக நம் பண்டைத் தமிழ் மருத்துவமே வடக்கே ஆயுர்வேதமாகவும், பின்னர்ச் சீன, செருமானிய, கிரேக்க நாடுகளிற் பரவி மீண்டுந் திசைதிரும்பி யுனானி மருத்துவமாகவும், திசைதிரும்பா ஆங்கில மருத்துவமாகவும் பயிலப்பெற்று வருவதைத் தமிழ் மருத்துவ வரலாறும், ஆயுர்வேத, ஆங்கில மருத்துவ வரலாறும், உலகியல் மாந்த, மொழி, நிலநூல் வரலாறும், நடுநிலையாகக் கற்றுணர்ந்த அறிஞர் பலரும் உறுதிப்படுத்துவர்.

நம் பண்டைத் தமிழ்மொழியின் அளப்பரும் தன்மைபோலவே நம் பண்டைத் தமிழ்மருத்துவத்தின் அருமைபெருமையும் அளக்கலாகாத் தன்மை வாய்ந்தது. நம் நாட்டுச் சிற்றூர்ப்புறங்களில் இன்றும் பல குடும்பங்களின் வழிவழித் தொழிலாய் அமைந்து, தீர்க்கலாகா வென்று பெரும்பெரும் ஆங்கில மருத்துவர்களாலும் அறுவை அறிஞர்களாலும் கைவிடப்பெற்ற புதுமையும் கடுமையும் கொடுமையும் வாய்ந்த பற்பல நோய்களையும்கூட, எளிதிற் கிடைக்கும் இலை, தழை வேர்களைக் கொண்டும் அல்லதவற்றைக்கொண்டு செய்யப்பெற்ற சாறு, வடிநீர், சுருக்கிவடித்த குழம்பு (கஷாயம்), நெய் அல்லது எண்ணெய் (கிருதம்), களிம்பு, மெழுகு (இலேகியம்), குளிகை, நீறு (பஸ்பம்) முதலிய வேதியல் மாற்றப் பொருள்களைக் கொண்டும் குணப்படுத்தி வருவதைக் கண்டும், கேட்டும், தாமே பட்டறிந்தும் வருகின்றமையை