பக்கம்:தமிழின எழுச்சி.pdf/56

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 
புதுவை மாணவர்களின் போராட்டம்!


புதுவை மாநிலம் தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும் ' அதனை ஆண்ட பிரஞ்சுக்காரர்களின் நடுநிலையான போக்கால் அதன் தலைநகரமான புதுவை அழகுமிக்க சிறந்த ஒரு நகரமாகவும் பிரஞ்சு மொழியும் தமிழ்மொழியும் கலந்துறவாடும் பொருளியல் பண்பாட்டு விளைநிலமாகவும் உருவாகியது. பிரஞ்சு அரசினரின் பரந்த சமநிலை மனப்பாங்கினால் புதுவைத் தமிழ்மக்களின் வாழ்க்கை மிகவும் மேம்பாடுற்று வந்த நிலையில், 1910-ஆம் ஆண்டில் வடநாட்டிலிருந்து வந்த அரவிந்தர், புதுவையின் செழிப்பான மண்ணில் தம் காலடிகளை ஊன்றினார். அவர்தம் தேசியக் கொள்கைகளையும் மெய்யறிவுக் கோட்பாடுகளையும் நம்பித் தமக்குத் துணையாக நின்ற ஒருசிலருட னும், பிரஞ்சினின்றும் தன் கணவனைத் துறந்து இவர் நடவடிக்கைகளில் மனம் ஊன்றி நின்ற செல்வக் கொழிப்புற்ற ஒரு நங்கையின் துணையுடனும் 1920 இல் “அரவிந்தர் ஆசிரமம்" எனும் பெயர் கொண்ட ஒரு பாழியை உருவாக்கினார். போதிய பொருள் வலியும், இந்தியத் தேசிய விடுதலை நோக்கங்கொண்ட பலரின் துணைவலியும் கொண்டு நின்றதால், அவ் அரவிந்தப் பாழி சிறிய ஓர் ஆட்சியமைப்பைப் போலவே தொடங்கிச் செயல்பட்டு உருவாகி வளர்ந்து, புதுவை மாநிலத்தின் பெரும்பகுதியினை வளைத்துத் தன்னுள் அடக்கி ஆட்கொண்டு, திமிர்ந்தெழுந்த ஓர் அனைத்ததிகார வல்லாட்சி போல் கொடிகட்டிப் பறக்க விட்டுக் கொண்டிருப்பதுடன், வெந்ததும் வேகாததுமான அதன் பழங்கோட்பாடுகளைப் பரப்பி வந்தது; வருகின்றது.