பக்கம்:தமிழின எழுச்சி.pdf/72

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

-பான். அவன் செய்யும் கேடுகள், குயவன் மண்பாண்டத்தைத் துணிக்கப் பயன்படுத்தும் கருவிபோல் நம்மை அடியூன்றக் கீழறுக்கும். உட்பகை தோன்றிய குடி எக்காலமும் அழிவுக்குத் தப்பாது. அக்குடியில் ஒற்றுமை இருப்பதுபோல் தோன்றினாலும் குடுவையின் மூடிபோல் இணைந்தும் இணையாததேயாகும். பொன்னைத் தேய்க்கும் அரம்போல் உட்பகை தன் குடியைத் தேய்த்துவிடும்; நிலையில் அது மிகச் சிறியதே யாயினும் அது தோன்றிய குடியின் பெருமையை எவ்வாற்றானும் கெடுத்து விடும். பாம்பு உள்ள வீட்டில் குடியிருப்பது போன்றதே பகையுள்ள இனத்தின் நிலை; என்பன திருக்குறள் கூறும் அமிழ்த மொழிகள்.

இன்று தமிழகத்தை அலைக்கழிக்கும் உட்பகை வடவருக்கும் பார்ப்பனருக்கும் மிக்க ஆக்கத்தைக் கொடுப்பது. அவர்தம் இன எழுச்சிக்கு மிகுதியும் ஊக்கம் தருவது. தமிழினம் ஊழி ஊழியாய் இருந்து வருவது. இன்றுள்ள இந்திக்காரரும், ஆரியக் கொழுந்துகளும் மண்ணில் கருவூன்றாக் காலத்திலேயே மண்ணை வளைத்து அரசோச்சிய இனம் தமிழினம். அதுதான் கடந்த மூவாயிர மாண்டுகளாக அழுத்தப்பட்டுக் கிடந்து உழன்று உயிர்வாழ்கின்றது. அதன் வீழ்ச்சி ஆரியப் பார்ப்பான் இந்நிலத்தில் அடியெடுத்துவைத்த பொழுதில் தொடங்கி இன்றுகாறும் தொடர்வது. அன்றே தொடங்கிய உட்பகையும் இன்றும் வேர்விட்டுத் துளிர்த்தபடியே வாழ்ந்து வருகின்றது. அதன் இறுதிக் கட்டமோ என்னவோ, இன்று அந்த உட்பகை அதன் ஆட்சிப்பீடத்தையே கவ்விக் கொண்டுள்ளது.

நம்மை இன்று அரசாளும் தமிழன் நெருப்பில் குளித்து வந்தவனல்லன். நெடுங்காலம் வீழ்ச்சியுற்றுக் கிடந்த இனத்தில் தோன்றிய ஒருவன் என்பதைத்தவிர அவனிடத்தில் வேறு தகுதிகள் இல்லையென்றாலும் இருக்கலாம். ஆனால் அவன் செய்கின்ற அறமற்ற செயல்கள் நமக்குள்ளேயே தீர்க்கப்பட வேண்டியவை. ஒருமுறையன்று நூறு முறை வேண்டுமானாலும் நமக்குள்தான் சொல்லிக்கொள்ள வேண்டும். அதைவிட்டு நம் குடுமியைப் பிடித்துக் கொண்டிருப்பவனிடம் நம் குறைகளைக் கூறினால், அவன் ஊரான் குடுமிதானே என்று ஓர் ஆட்டுக்குப் பத்து ஆட்டு ஆட்டுவான். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குத்தானே கொண்டாட்டம். நமக்கு என்றும் திண்டாட்டம் தானே!

அவன்மேல் இன்று சாற்றப்பெறும் குற்றச்சாட்டுகள் நேற்று நிகழ்ந்தவை தாமே! அதுவும் நேற்றே நிகழ்ந்தவை அல்லவே நேற்று, அதற்கு முன் நாள், அதற்கு முந்தின நாள்- என்று இப்படி நாளாவட்டத்தில் நிகழ்ந்தவைதாமே! அவ்வப்பொழுது அதையதைக் கிள்ளிப் போட்டிருந்தால் இக்கால் நீ கூறுகிறபடி அதை வெட்டவேண்டிய வேலையிருக்காதே. உன்னால் வெட்ட முடியவில்லையென்று உன்