பக்கம்:தமிழின எழுச்சி.pdf/8

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 7


  • நெஞ்சத்தூய்மையும் ஒழுக்கமும் தலையாகக் கொள்ளல் வேண்டும்.
  • மொழியறிஞர்தம்மையும், நாட்டுப்பெரியோரையும் போற்றிப்

புரத்தல் வேண்டும்.

  • தனிக்கட்சி வகுக்காமல் மொழியுணர்வாலும், நாட்டுப்பற்றாலும் ஒருங்கு சேரல் வேண்டும்.
  • கூடியமட்டும் பிறமொழிக் கலப்பின்றி (மானத்தோடு) எழுதுதல் பேசுதல் வேண்டும்.
  • இவ்வாறு கொண்டு ஒழுகுவார் இழப்பது ஒன்றுமில்லை. பெறுவது கோடி!


தூய்மையான தமிழ்க்குருதி உடலிலோடும் தமிழ் மாந்தர்க்கே இவை ஏற்றனவாகும்!

சோற்றுப் பருக்கைக்கு அங்காந்து, வீசும் காசுக்குக் கையேந்தி, தாளேவற்றாத் தலைசாய்க்கும் தமிழர், நம் நாட்டில் முளைத்த காளான்கள் எனக் கொள்ளுங்கள்.

'அவர் இறப்பின் அவர்தம், உடல்கள் கள்ளிக்கு எருவாகுமேயன்றி மக்கட்கு அருவி ஆகா' என்று கூறி அவர்பற்றிக் கவலை கொள்ளல் வேண்டாம்.

தென்மொழி இயல்-1, இசை-1, ஆகத்து 1959
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின_எழுச்சி.pdf/8&oldid=1431316" இலிருந்து மீள்விக்கப்பட்டது