பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/155

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

153



கடித வாசகங்கள் மைந்தனின் கண்களில் நீரை சொரியச் செய்தன. அவரின் உள்ளம் தெளிந்த நீரோடை போலாயிற்று. அபுசுப்யானின் அந்தகாரச் சூழலினின்றும் முற்றும் விடுபட்டு தீனொளியின்பால் சிந்தையைச் செலுத்தினார் நல்வழி ஏக நற்செய்தி கொண்டுவந்த முர்ரத்தின் இருகரம் பற்றி அவரையே சாட்சியாக வைத்து,

“ஏகனே உண்மை என்றும்
எழில் நபி ரசூல் என்றும்
மோகமாம் கலிமா முற்றும்
மொழிந்தனர் முக்கா லன்றே”

இஸ்லாத்தைத் தழுவினார். நபிவழி நடந்து மறை நெறி போற்றி இறைவழி வாழ உறுதி கொண்ட அப்துர் ரஹ்மானின போக்கறிந்து சினமிகக் கொண்ட அபுசுப்யான் பணயப் பொருளாக நிற்கும் அசுமத்தின் இள மகனை இழுத்துச் சென்று கொல்லுமாறு பணிக்கிறான். இதைக் கண்டு கொதித்தெழுந்த அப்துர் ரஹ்மான் சிறுவனின் தளைதெறித்துத் தன்னருகே இருத்திக் கொண் டார். இதைக் கண்டு செய்வகை தெரியாது திகைத்து நின்ற அபுசுப்யான், ஏமாற்றம் மிக்கவனாய் வந்தவழி நடந்தான்.

இனியும் இஸ்லாத்தின் விரோதியாகிய அபுசுப்யானோடு இருக்க விரும்பாத அப்துர் ரஹ்மான், பெற்றோர் வாழும் மதினா மாநகர் செல்ல ஆயத்தமானார். தன் உள்ளக் கிடக்கையைத் தன் இல்லக் கிழத்தியாகிய அன்பு துணைவிக்கு அறிவித்து,

“எங்கள் நன்நெயினாக முகமது நபியை
இருதயத் திருத்தி என் தகப்பன்
தங்கிய மதினவள நகர் அதனில்
சார்வதற்கு இன்றுயான் பயணம்