பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/163

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

161


கிறதாம் வெட்கத்தால் அதன் உடல் கூனிக் குறுகி ஒடுங்கி வளைந்து நெளிந்து சிறுத்துப் போகிறதாம், இவ்வாறு கவலையாலும் ஏக்கத்தாலும் தேய்ந்து மெலிந்து மறைந்து பின், தேறுதலடைந்து சிறிதுசிறிதாக வளர்ந்து மீண்டும் வெட்கத்தாலும் ஏக்கத்தாலும் தேய்ந்து மறைகிறதாம் இவ்வாறு மாதந்தோறும நடைபெற்று வருகிறதாம். இதை,

“செய்யிதத்து எனும் மடந்தை
செய்யதுண்ட மாமதி
வையகத்து இருப்பு வந்துவந்து
கண்டு வெட்கலான்
மெய் ஒடுங்கி அமுதுசிந்தி
மிகவளைந்து நாணிவெண்
கையிழந்து தேயும் இந்து
கவலும் திங்கள் தோறுமே”

எனக் கூறிக் களிப்பூட்டுகிறார் புலவர்.

இவரது காப்பியத்தில் அழகுச் சுவை ஆங்காங்கே இடம் பெற்றிருப்பது போன்றே, அக்காலத் தமிழக முஸ்லிம் பெரு மக்கள் கைக்கொணடிருந்த இஸ்வாமியப் பண்பு நெறிகளும் இடம்பெற்று இன்புறுத்துகின்றன. இனிய சந்த இசையோடு கூடிய இவரது காப்பியப் பாடல்களுக்கிடையே அக்காலத்தில் இசையொலி எழுப்பப் பயன்பட்ட இசைக்கருவிகளைப் பற்றிய செய்திகளும் இடம்பெறத் தவறவில்லை. அக்காலத் தமிழகத்தில் பயன் பட்டு வந்த பதினெட்டு வாத்தியக் கருவிகளின் பெயரை ஒரு பாடலில்,

“முரசு துந்துமி திமிலை பம்பைகள்
முருடு திண்டிமி மத்தளம்
குறைசெய் பூரிகை கவுரிகாகம்
கொம்பு மோகர வீணைகள்
பெருவணப் பறை சின்னமுந்துடி
பேரி கின்னரமும் தவில்