பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

ஈசுப் நபி கிஸ்ஸா மிகவும் எளிய நடையில் அன்றாட வாழ்வில் பயிலப்படும் சாதாரண சொற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்குச் சான்றாக நூலின் காப்புச் செய்யுளைக் கூறலாம். விருத்தப்பாவில் அமைந்துள்ள அப்பாடல்,

"அருளுண்டாம் கிருபையுண்டாம்
ஆண்டவனுதவி யுண்டாம்
பொருளுண்டாம் இன்பமுண்டாம்
பெருமையும் மகிழ்ச்சியுண்டாம
நரர் நபி யூசுபுதனற கிஸ்ஸாவதனைக் கூற
திருவருளளிக்கும் கோமான்
சீர்தரக் காப்புத்தானே"

என மிக எளிய நடையில், அதே சமயத்தில் இலக்கியத் தரம் குறையாவண்ணம எடுத்தியம்புகிறார்.

தனது பன்னிரண்டு மக்களுள் ஈசுபு நபியவர்கள் மட்டுமே அறிவிலும் திருவிலும் மிக்கவராய் விளங்கியமையால் யாகூபு நபியவர்கள் தம் அன்பையும் பாசத்தையும் மழை எனப் பொழியலானார். இஃது மற்ற சகோதரர்களிடமே பொறாமையுணர்வைப் பொங்கியெழச் செய்தன. தங்கள் தந்தையார் தங்களிடம் காட்டாத அன்பையும் அரவணைப்பையும் பொழிவதைக் காணப் பொறாதவர்களாக ஈசுபு நபியிடம் வெறுப்புக் கொண்டனர்.

சிறுவர் ஈசுப் ஒருநாள் இரவு தன் துாக்கத்தில் ஏதோ ஒரு பேரொளி தன் மடிமீது வந்தமர்ந்ததுபோல் கனவு கண்டு அதனைத் தன் தந்தையாரிடம் எடுத்துக் கூறினார். இதனைக் கேட்ட தந்தையார் யாகூபு நபியவர்கள், தன் மகன் ஈசுபும் நபியாகக் கூடும் எனக்கருதினார். நபித்துவம் பெறுவதற்கான மிக நல்ல அறிகுறியாக அதனைக் கருதி-