பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

95

"வாழ்ந்த காலத்திலெல்லாம் வாழ்ந்து
       வல்லோன் தனை வணங்காமல் நீங்காமல்
சூழ்ந்த வினையெல்லாப் உலகிற் செய்து
      தொலையாத் துன்பமாய் வீண்நாள்போக்கி
தாழ்ந்து மடிந்து இங்கே வந்தபோது
      தவிப்பது மிகக் குற்றமாமே
வாழ்ந்த நாளிலே வணங்கிவந்தால்
     வரிசை மிகவுண்டு றாஹத்துண்டு"

எனக் கூறுவதன் மூலம் இறைவன் விதித்த தீன்நெறி வழியே வாழ்ந்து இறைவனின் இன்னருளைப் பூரணமாய்ப் பெறுபவன் மரண வேதனையினின்று விடுபட்டவனாய். இறுதித் துாக்கத்தில் பூரண அமைதி பெறுவான் என்பதைத் தெளிவாக்குகிறது இச்'சக்கறாத்து நாமா'நூல்

இந்நூல் ஒருவர் இறக்கும் தருவாயில் படும் மரண அவஸ்தைகளைப் பற்றி விஸ்தாரமாகப் பேசும் அதே நேரத்தில், அவ்வேதனைகளினின்றும் எளிதில் விடுபட இறை மன்றாட்டையும் பற்றி இனிதோதுகிறார். இந் நூலைப் படிப்போர் இயல்பாகவே இக்கொடிய மரண வேதனையற்றவர்களாகத் தங்களை ஆக்கிக் கொள்ள, இறைவனின் பொருளுக்குட்பட்டவர்களாய், வல்ல அல்லாஹ் விதித்த நியமப்படியான வாழ்க்கை முறையை தீன் நெறி வாழ்ந்து உய்வு பெறத்தக்க தூண்டுதல்களை இயல்பாகப் பெறுவர்.

இந்நூல் மற்ற இஸ்லாமிய நூல்களில் கையாளப்பட் டுள்ள 'தொங்கல்’ எனும் பாவினத்தில் படைக்கப்பட்டிருந்தாலும் ஆங்காங்கே வெண்பாக்களும் இடம்பெற்றுளளன.

'நாமா' இலக்கிய வகை நூல்கள், மக்கள் இம்மையின் இன்பத்தில் மூழ்கி இறை வழி பிசகி மறுமையில் அடையும் துன்பத்தைப் பற்றி பெரிதும், அச்சமூட்டி எச்சரித்து மக்களை இறைநெறி வழுவாமல் வாழத் துாண்டி, வழி நடக்க வழி காட்டுகின்றன.