பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தமிழ்ப் பழமொழிகள்

41


கடுகு மலை ஆச்சு; மலை கடுகு ஆச்சு.

கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டினது போல.

(திருவள்ளுவ மாலை.)

கடுஞ் சிநேகிதம் கண்ணுக்குப் பொல்லாதது.

(கடும் நட்பு, பகை.)

கடு நட்பும் பகை விளைப்பு. 6590


கடும் காற்று மழை காட்டும்; கடு நட்புப் பகை காட்டும்.

(கடும் சிநேகம்.)

கடும் கோபம் கண்ணைக் கெடுக்கும். கடும் சிநேகம் கண்ணைக் கெடுக்கும்.

(நட்பு. கண்ணுக்குப் பகை. கண்ணுக்கு-பொல்லாப்பு.)

கடும் செட்டுக் கண்ணைக் கெடுக்கும்.

(கடும் தேட்டு.)

கடும் செட்டுக் காரியக் கேடாம். 6595


கடும் செட்டுத் தயவைக் கெடுக்கும்.

கடும் சொல் கேட்டால் காதுக்குக் கொப்புளம்.

கடும் பசி கல்மதில் உடைத்தும் களவு செய்யச் சொல்லும்.

(உடைத்தாவது.)

கடும் போரில் கைவிடலாமா?

கடு முடுக்கடா சேவகா, கம்பரிசியடா சம்பளம். 6600


கடுவெளியைக் கானல் ஜலமாய்க் கண்டது போல.

கடை அரிசி கஞ்சிக்கு உதவுமா?

கடை ஓடித் தாவும் நிலத்துக்குக் கரையடி மேட்டு நிலம் எளிது.

கடைக்குக் கடை ஆதாயம்.

கடைக்குக் கடை ஆள் இருப்பார்கள். 6505


கடைக்குக் கடை ஆள் தாவியென.

(ஆள்தான்.)

கடைக்குட்டி கட்டி மாம்பழம்.

கடைக்குப் போகக் கண்ணிக்குப் போக.

கடை காத்தவனும் காடு காத்தவனும் பலன் அடைவார்.

கடை கெட்ட நாய் கல்யாணத்துக்குப் போனதாம்; எச்சில் இலை கிடைக்காமல் எட்டி எட்டிப் பார்த்ததாம். 6610