பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

தமிழ்ப் பழமொழிகள்


கதிரிலே ஒடிக்காதே என்றால் கணுவிலே ஒடித்துப் போடுகிறாயே!

கதிருக்கு முந்நூறு நெல் இருந்தால் முழு வெள்ளாண்மை.

(விளைச்சல்.)

கதிரைக் களைந்தும் களையைப் பிடுங்கு.

கதிரைப் பார்க்கிறதா? குதிரைப் பார்க்கிறதா?

கதை அளக்கிறான். 6875


கதைக்குக் கண் இல்லை; காமத்திற்கு முறை இல்லை.

கதைக்குக் கால் இல்லை; கண்ட புருஷனுக்கு முறை இல்லை.

கதைக்குக் கால் இல்லை; கொழுக்கட்டைக்குத் தலை இல்லை; கூத்தாடிக்கு முறை இல்லை.

கதைக்குக் கால் இல்லை, பேய்க்குப் பாதம் இல்லை.

(பிட்டம் இல்லை.)

கதைக்குக் காலும் இல்லை; கத்தரிக்காய்க்கு வாலும் இல்லை. 6880


கதைக்குக் காலும் இல்லை; தலையும் இல்லை.

கதை கதையாம் காரணமாம்; காரணத்தில் ஒரு தோரணமாம்.

கதை கேட்ட நாயைச் செருப்பால் அடி.

கதை பண்ணுகிறான்.

கதை முடிந்தது; கத்தரிக்காய் காய்த்தது. 6885


கதையை நிறுத்திக் காரியத்தைப் பேசு.

கதையோ பிராமணா, கந்தையோ பொத்துகிறாய்? அல்லடி பேய் முண்டை, சீலைப்பேன் குத்துகிறேன்.

கந்தப்பூர் சிற்றப்பா நமஸ்காரம்; பாதி பொச்சை மூடிக்கொண்டு பாக்கியசாலியாய் இரு.

கந்தப் பொடிக் கடைக்காரனுக்குக் கடுகு வாசனை தெரியுமா?

கந்த புராணத்தில் இல்லாதது எந்தப் புராணத்திலும் இல்லை. 6890


கந்த புராணம், நம் சொந்தப் புராணம்.

கந்தர் அந்தாதியைப் பாராதே; கழுக்குன்ற மாலையை நினையாதே.

(கழுக்குன்றம் மலை வழி போகாதே, தொடாதே.)

கந்தலில் கால் இட்டது போல.